பதிவு செய்த நாள்
11
ஜூன்
2018
01:06
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி, வெள்ளக்குட்டி கரடு, விநாயகர் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. காலை, 11:00 மணிக்கு, சிறப்பு யாகம், விநாயகருக்கு பால், இளநீர், திருமஞ்சனம், பன்னீர், தேன், பழவகைகளால் அபி?ஷகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. இரவு, முக்கிய வீதிகள் வழியாக, சுவாமி திருவீதியுலா நடந்தது.