பதிவு செய்த நாள்
11
ஜூன்
2018
01:06
தலைவாசல்: வைகாசி திருவிழாவை முன்னிட்டு, தலைவாசல், சார்வாயிலுள்ள, கிழக்கு மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து, ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து, கோவிலை அடைந்தனர். சிலர், அக்னி சட்டி ஏந்தி, பத்ரகாளி வேடமிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து, ஏராளமானோர் சுவாமியை தரிசித்தனர்.