சிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் அருகே புறக்காவல் நிலையம் அமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிங்கம்புணரி வழியாக செல்லும் வாகனம் இந்தக் கோயில் வழியாக சென்று நகரை கடந்து செல்ல வேண்டும். சேவுகப்பெருமாள் கோயிலும் சிவபுரிபட்டி சிவன் கோயிலுக்கும் பெண்கள் அதிகளவில் வருகின்றனர். இச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லாததால் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடக்கிறது. எனவே இந்த இடத்தில் நிரந்தரமாக புறக்காவல் நிலையம் அமைத்து பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.