சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நரசிம்ம சுவாமிக்கு, ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், ஜூன், 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தேர்த்திருவிழா நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்பட்டது. மாடவீதிகளில், தேரில் வலம் வந்த தெள்ளியசிங்கர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.