உடுமலை: உடுமலை, வலம்புரி விநாயகர் கோவில் ஆறாம் ஆண்டு விழா நடந்தது.உடுமலை அருகே, குருவப்பநாயக்கனுாரில் வலம்புரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் ஆறாம் ஆண்டுவிழா நேற்று நடந்தது. ஆண்டு விழாவை முன்னிட்டு காலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது.மாலை, 6:00 மணிக்கு விநாயகர் மற்றும் பாலமுருகனுக்கு பாலபிேஷகமும், இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் செய்யப்பட்டது. அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.