சுபநிகழ்ச்சி எதுவானாலும் முதலில் இடம் பெறுவது இனிப்பு. அது ஆன்மிகத்தின் விருப்பு; அறிவியலின் பொறுப்பு. இனிப்பில் தொடங்கினால் இனிதாகவே இருக்கும் என்பது ஆன்மிகம் நமக்கு ஊட்டிய நம்பிக்கை இனிப்பு. ஆன்மிகத்தின் பார்வையில் இனிப்பு என்பது நம்பிக்கை என்றால், அறிவியலின் பார்வையில் அது செரிப்பதற்கு உதவும் ‘தெம்பிக்கை’ (தெம்பு+கை) விருந்தில் இனிப்பை முதலில் சாப்பிடுவதால், அது இரைப்பை, மண்ணீரல் போன்ற செரிமான உறுப்புகளை வேலை செய்யத் தூண்டுகிறது. நாம் சாப்பிடும் தடபுடல் விருந்து எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.
பி.கு.: இந்த செய்தி சர்க்கரை நோய் உள்ளவருக்கு அல்ல.