பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
02:07
திண்டிவனம்: திண்டிவனம் எம்.ஆர்.எஸ். ரயில்வே கேட் அருகில் உள்ள பெரிய முத்துமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. இதையொட்டி, இக்கோவில் வளாகத்தில், நேற்று காலை 4:30 மணிக்கு விநாயகர் பூஜை, கலச ஸ்தாபனமும், அபிஷேக ஆராதனையும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, சந்தனகாப்பு அலங்காரமும், அம்மன் முத்து பல்லக்கில் வீதியுலாவும் நடந்தது. வரும் 27 ம் தேதி காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 7:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. அடுத்த மாதம் 3ம் தேதி காலை 10:00 மணிக்கு சாகை வார்த்தல் மற்றும் அம்மன் வீதியுலா நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்துடன் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 10ம் தேதி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலாவும், 17 ம் தேதி இரவு 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண வைபவமும், 24ம் தேதி காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6:00 மணிக்கு குங்கும அலங்காரமும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஸ்ரீகன்யா, செல்வராசு, சிவசங்கர் ஆகியோர் செய்துள்ளனர்.