பதிவு செய்த நாள்
23
ஜூலை
2018
12:07
கொடுமுடி: அமராவதிப்புதூர் மாசாணி அம்மன் கோவிலில், பொங்கல் விழா நடந்தது. கொடுமுடி, கொளத்துப்பாளையம், அமராவதிப்புதூரில் மாசாணி அம்மன், வெக்காளி அம்மன் ஆலயம் உள்ளது. ஆடி மாத, பொங்கல் விழா, இங்கு நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான, பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. திரளான பெண்கள், பொங்கல் வைத்தும், மாவிளக்கு பூஜையும் செய்து, அம்மனை வழிபட்டனர். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தீர்த்தக்குடம், பால்குடம், கரகம் அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் காப்பு அவிழ்த்தல், கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டம் நடந்தது. இன்று அபிஷேகம், மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.