சேதுநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2018 11:07
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்ய மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்கியபடி வணங்கினர். பின்னர் சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலையில் சுவாமி வீதியுலா நடந்தது. ஒவ்வொரு நாளும் சுவாமி, தாயார்களுடன் தனித்தனி அலங்காரத்தில் எழுந்தருள்வார். விழாவின் 5ம் நாளில் திருக்கல்யாணம், 6ம் நாளில் தேரோட்டம் நடைபெறும். கலைவிழா பந்தலில் நடனம், இசை, ஆன்மிக சொற்பொழிவுகள் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். சுற்று கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவர். கோயில் சேவா சமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், தலைவர் ராஜகோபாலன், செயல் அலுவலர் சுந்தர்ராஜன் ஏற்பாடுகளை செய்தனர்.