ராமேஸ்வரம்: தீப புகையில் மாசுபடுவதை தடுக்க ராமேஸ்வரம் கோயிலில் புதியதாக நவக்கிரக விளக்கு வைக்க,கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பிறகு கோயில்களில் பக்தர்கள் விளக்கு ஏற்ற தடை விதித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தர விட்டார்.கடந்த ஜூன் 4ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி சன்னதி முன்புறமுள்ள நந்தி மண்டபத்தில் அணையா விளக்கு வைக்கப்பட்டது. தற்போது பித்தளையால் தயாரித்த 9 விளக்குகள் அடங்கிய நவக்கிரக விளக்கை முசிறியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் நேற்று கோயில் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர். இந்த விளக்கு நடைமுறைக்கு வந்தபின், பக்தர்கள் எண்ணெய் மட்டும் ஊற்ற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.