பதிவு செய்த நாள்
24
ஜூலை
2018
11:07
திருப்பூர்;ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு, பாண்டுரங்கன், ருக்மணி தேவி சன்னதியில், பக்தர்கள் கருவறைக்குள் சென்று வழிபட்டனர்.திருப்பூர் ராயபுரத்தில் உள்ள, ராஜவிநாயகர் கோவில் உள்ளது. அதிலுள்ள பாண்டுரங்கன் ருக்மணி தேவி சன்னதியில், ஆண்டுதோறும், ஆஷாட ஏகாதசி தினத்தில், பக்தர்கள் கருவறைக்குள் சென்று, வழிபட அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, ஆஷாட ஏகாதசி தினமான நேற்று, பக்தர்கள் கருவறைக்குள் சென்று பாண்டுரங்கனை வழிபட்டனர். இதையொட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான், குரு பிரம்மஸ்ரீ நாகேஸ்வர சமர்மா குழுவினரின், ஹரி நாம சங்கீர்த்தனம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மாலை, சேக்கிழார் புனித பேரவை குழுவினரின், விஷ்ணு சகஸ்ர பாராயணம், பஜனை மற்றும் கோலாட்டம் நடந்தது. அதன்பின், கணேச சர்மா குழுவினரின், அபங்க நாம சங்கீர்த்தன பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.