பதிவு செய்த நாள்
24
ஜூலை
2018
01:07
ஈரோடு: கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், அறுபத்து மூவருக்கு, 16 வகையான திரவியங்களில் அபிஷேகம் நடந்தது. ஈரோடு கோட்டை, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், அருள்நெறி திருக்கூட்டம் சார்பில், 73 ஆண்டு திருமுறை மாநாடு, 49வது ஆண்டு அறுபத்து மூவர் விழா, கடந்த, 20ல் தொடங்கியது. நேற்று மாலையுடன் முடிந்தது. இதையொட்டி சிறப்பு வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, வன்னியம்மன் அபி?ஷகம், சுவாமிகள் திருவீதியுலா நடந்தது. காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அடியார்கள் திரளாக பங்கேற்றனர். இதையடுத்து விழா மண்டபத்தில், மூல மூர்த்திகள் மற்றும் பஞ்ச மூர்த்திகள், அறுபத்து மூவர் ஆகியோருக்கு, பால், தயிர், இளநீர் உள்ளிட்ட, 16 வகையான, அபி?ஷகம் செய்யப்பட்டது. மாலையில், பஞ்ச மூர்த்திகள் தனித்தனி சப்பரத்திலும், அறுபத்து மூவர், ஒரே புஷ்ப விமானத்திலும், அடியார்கள் புடை சூழ திருவீதி பவனி வந்தனர். இதில், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட, பன்னிரு திருமுறைகளை பாராயணம் செய்தபடி, அடியார்கள் வந்தனர்.