கீழக்கரை: ஏர்வாடி தர்காவில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்கா உள்ளது.கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான யாத்திரீகர்கள் வந்து செல்கின்றனர். 844ம் ஆண்டு சந்தனக்கூட்டிற்கான மவுலீது எனும் புகழ்மாலை கடந்த ஜூலை 14 சனிக்கிழமை அன்று மாலை 6:30 மணிக்கு தொடங்கியது. நாள்தோறும் இரவு 10 :00 மணி வரை நடந்து வருகிறது. நேற்று மாலை 5:00 மணியளவில்தர்காவின் முன்புறமுள்ளமைதானத்தில்40 அடி உயர அடிமரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மதியம் 3:30 மணியளவில்ஏர்வாடி தைக்காவில் இருந்துகொடி ஊர்வலம் புறப்பட்டு,மாலை 6:00 மணியளவில்கொடியேற்றம் செய்யப்படும்.ஏற்பாடுகளை தர்கா ஹக்தார்பொது மகாசபை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் செய்திருந்தனர்.