பரமக்குடி பெருமாள் கோயிலில் ஆடி பிரமோத்ஸவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2018 11:07
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி பிரமோத்ஸவ தேரோட்டம் நடந்தது. முன்னதாக நேற்று காலை 8:30 மணிக்கு தேர் முன்பு சிறப்பு ேஹாமங்கள் நடந்தன. தொடர்ந்து பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் காலை 10:00 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் ரதவீதிகளில் வலம் வந்த தேரினை கோவிந்த கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 12:45 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பின்னர் கோயில் ஆடி வீதியில் வலம் வந்த பெருமாளுக்கு 108 தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்றுகாலை தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.