பதிவு செய்த நாள்
28
ஜூலை
2018
01:07
செஞ்சி: செஞ்சி பி.ஏரிக்கரை சுப்பரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. செஞ்சி பி. ஏரிக்கரை மீதுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் 47வது ஆண்டு ஆடி கிருத்திகை விழா வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்று விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்குவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். 8 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து சிறப்புஹோமம் நடந்தது. காலை 9 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து கொடியேற்றினர். தொடர்ந்து மகா தீபாராதனையும், உற்சவர்கள் கோவில் உலாவும் நடந்தது. பக்தர்களுக்கும் காப்பு அணிவித்தனர். இதில் கமலக்கன்னியம்மன் கோவில் அரங்காவலர் அரங்க ஏழுமலை, சுப்பிரமணியர் கோவில் நிர்வாகிகள் சிவக்குமார், மதியழகன், விழா குழு நிர்வாகிகள் ரமஷே், கருணாநிதி, தீபாவளி ஏழுமலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். வரும் 5ம் தேதி ஆடி கிருத்திகையன்று பால் குடம், அக்னி சட்டி ஊர்வலம். சக்திவேல் அபிஷேகம், சக்திவேல் வீதி உலா, மிளகாய்பொடி அபிஷேகம், செடல் சுற்றுதல், தீமிதித்தல் மற்றும் தேர் இழுத்தல் நிகழ்ச்சிகள் விமர்சையாக நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.