ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் திடீரென உள்வாங்கிய கடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2018 12:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று திடீரென கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் நேற்று அதிகாலை 50 மீட்டர் துாரத்திற்கு திடீரென கடல் உள் வாங்கியது. கடற்கரையில் சிப்பிகள், பாசி படிந்த பாறை கற்கள் வெளியே தெரிந்தது. காலையில் புனித நீராட வந்த பக்தர்கள், கடல் உள்வாங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மதியம் 12:00 மணிக்கு பிறகு கடல் நீர் மட்டம் உயர்ந்ததும், வழக்கம் போல் அக்னி தீர்த்த கடற்கரை வரை நீர் மட்டம் உயர்ந்தது. தென் மேற்கு பருவ காற்று வீசும் ஜூன் முதல் ஆக., வரை சீசனுக்கு ஏற்ப அக்னி தீர்த்தம், ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரையில் சில நேரம் கடல் உள்வாங்குவது வழக்கம் தான் ,என மீனவர்கள் தெரிவித்தனர்.