பதிவு செய்த நாள்
06
ஆக
2018
02:08
குன்னுார்:குன்னுார் உழவர் சந்தை அருகே, எல்.ஐ.சி., காலனியில், ஜெய்பவானியம்மன் கோவிலில், சப்த கன்னிகள் ஹோமம் நடந்தது.குன்னுார் உழவர் சந்தை அருகே எல்.ஐ.சி., காலனியில், அமைந்துள்ள ஜெய்பவானி அம்மன் கோவிலில், 23வது ஆண்டு ஆடித்திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கணபதி ஹோமம், மிருத்யஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம், சவுந்தர்ய லகரி பாராயணம், பூஜை ஆகியவை நடந்தன. நேற்று காலை, 8:00 மணி முதல் 12:00 மணி வரை சப்த மாத்ரிகா ஹோமம் எனப்படும் சப்த கன்னிகள் ஹோமம் நடந்தது. பின்னர் ஒன்பது இளம் பெண்களை அமர வைத்து பூஜைகள் நடத்தி மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அருணாசல மகிமா பஜனை குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு ஆகம விதிப்படி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது.