பழநி : பழநி மஞ்சநாயக்கன்பட்டி உச்சிமாகாளியம்மன் கோயில் விழாவில், ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பழநி அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் உச்சிமாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தாண்டு விழாவை முன்னிட்டு நேற்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பால்குடங்கள் எடுத்து, வேணுகோபாலசுவாமி கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்தனர். பின் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. அலங்காரத்துடன் அர்ச்சனை, தீபாராதனை பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.