தாண்டிக்குடி: தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் செல்வவிநாயகர் மற்றும் கன்னிமார், கருப்பண்ணசுவாமிக்கு பிரதிஷ்டை விழா நடந்தது. முன்னதாக இரண்டு கால யாகசாலை பூஜையுடன் கணபதி ேஹாமம், கோ பூஜை மற்றும் சகல பூஜைகள் நடந்தன. செல்வவிநாயகருக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் நடந்தன. ஆராய்ச்சி நிலையத் தலைவர் ஆனந்தன், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரி முதல்வர் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். கீழ் மலைப்பகுதி விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையொட்டி அன்னதானம் நடந்தது.