மயிலாடுதுறை: சீர்காழி அருகே நூற்றாண்டுகள் பழமையான விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம்.
நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆமபள்ளம் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ விருக்ஷ ராஜ கணபதி கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயில் மிகவும் சிதிலமடைந்திருந்த நிலையில் கிராம மக்கள் பங்கேற்புடன் கோயில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது. நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து கடங்கள் புறப்பட்டு மங்கல வாத்தியம் முழங்க கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சந்திரசேகர குருக்கள் புனித நீரை விநாயகர், முருகன் மற்றும் நாகர் சன்னதி கோபுரகலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். அதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.