பழநி: கார்த்திகையை முன்னிட்டு, பழநிமுருகன் கோயிலுக்கு பக்தர்கள் மூன்றுமணி காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயில் கார்த்திகையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கேரளா, ஆந்திரா ஆகிய வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் பால்குடங்கள், தீர்த்தக்காவடி எடுத்தும் படிப்பாதையில் கற்பூரம் ஏற்றி படிபூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள், வின்ச், ரோப்கார் ஸ்டேஷனில் 2 மணிநேரம் வரையும், பொதுதரிசன வழியில் 3மணிநேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். இரவு தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.