Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொற்றாமரைக்குளம்
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 10. திருக்கோயில் தரிசனம்
திருக்கோயில் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2018
05:09

அங்கயற்கண்ணி, பங்கையர்ச்செல்வி, அன்னை ஸ்ரீ மீனாக்ஷியையும், அய்யன் சொக்கேஸ்வரரையும், மனம் நினைக்கின்ற போதெல்லாம் நாம் புதிது புதிதாய் இப் புண்ணிய பூமியில் பிறக்கின்றோம். ""உன்னை நினையாத நேரம் நான் பிறவாத நேரம், எனப் பெருமகனார் பகன்றது போல நெஞ்சகத்தே விதைத்த அவள் நினைவுருவை நேரில் பார்க்கும் போது கண்ணினாற் செய் புண்ணியத்தினை அறுவடை செய்வோமா! எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத அம்மையப்பனின் திருக்காட்சியை வெளியூரில் இருந்து, மதுரை வந்த பக்த கோடிகளோடு நம்மையும் இணைத்துக் கொண்டு, மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவோம்.

கிழக்கு நோக்கியவாறு டவுன்ஹால்  Town  சாலை வழியாகக் கோயிலை நோக்கி நகருகிறோம். சிறிது தூரம் சென்றதும் வலதுபுறம் ஒரு தெப்பக்குளம் இருக்கிறது. இதனை மறைக்கும் வகையில் சுற்றிப் பல சிறிதும், பெரிதும் ஆன மின் பொருட்கடைகள் அணிவகுத்திருக்கிறது. இடைவெளி ஏதாவது ஒன்றில் எட்டிப்பார்த்தால் மட்டுமே தெரியும் இக்குளம். இது கரியமாணிக்கம் பெருமானுக்குரிய தெப்பக்குளம் என்று வழக்கில் இருக்கிறது. இப்பெருமானின் மூலவர் கோயில் தற்போது இதன் அருகில் இல்லை. தொடர்ந்து மேற்குமாசிவீதி, மேற்கு ஆவணிமூல வீதிகளின் நடுவே குறுக்காகக் கடந்து, மேற்குச் சித்திரை வீதி நடுவே நம்மை வரவேற்பது மேலச்சித்திரை வீதி கோபுரம் இதை மேலக்கோபுரம் என்பார்கள். மொத்தக் கோபுரங்கள் 12ம், விமானம் 2ம், பற்றிய முழு விபரங்களும் தனியே தொகுத்து சேர்க்கப் பட்டிருக்கிறது. தொடர்ந்து மேலக்கோபுர தரிசனம் முடித்து சித்திரைவீதி வலம் வருவோம். வெளிச்சுற்று திருமதிற்சுவர்களை ஒட்டி நடக்கிறோம்.

இச்சுவர்களின் மொத்த நீளம் 1639அடி, உயரம் சுமார் 50அடி. வடக்குச்சித்திரை வீதியின் ஏறத்தாழ நடுவே வடக்குக் கோபுர தரிசனம் செய்து மொட்டைக்கோபுரம் கோபுரத்தின் கீழே ஒட்டியவாறு அமைந்துள்ள மொட்டைக் கோபுர மூனீஸ்வரரை வணங்கி, கிழக்குச் சித்திரை வீதி சொக்கேச-சோமசுந்தரரின் சுவாமி சன்னதி கிழக்கு ராஜகோபுரம் தாண்டி, இதுவரையுள்ள வழக்கத்தின்படி அன்னை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன்சன்னதி எனப்படும் அன்னை சன்னதிக்குச் செல்லும் நுழைவாயில் மண்டபத்தை அடைகிறோம். முன்னைப்பெரு மூத்தவர் வினாயகனும், என்னை வணங்கப் பழனித்தலம்வா எனக்கூறிய சின்னவர் முருகனும், ஆசி கூறி நம்மை வரவேற்கிறார்கள்.

நாம் நிற்கும் மண்டபம் அஷ்டசக்தி எண்சக்தி மண்டபம் எனப்படும். தலம், மூர்த்தி, தீர்த்தம் இம்மூன்றின் சிறப்புகளில் அத்தனையும் காட்டியபடி திருவிளையாடல் புராண நிகழ்வுகளையும் கட்டியம் கூறும் முகவுரை கூறுவதற்கென வடிவமைக்கப்பட்ட மண்டபமாகவே இஃது காட்சி தருகிறது. இறைவி எட்டு அம்சங்களைக் கொண்டவள் என்பதை சித்தரிக்கும் வகையிலும், அட்ட லட்சுமியாய் இருப்பவளும் தானே எனக் கூறுதல் போல் இம்மண்டபத்தின் இருமருங்கும் நான்கு, நான்காய் எட்டுதூண்களில் இடப்புறமுள்ள நான்கில், 1) கௌமாரி, 2) ரௌத்திரி, 3) வைஷ்ணவி, 4) மஹா லட்சுமி என்றும், வலப்புறமுள்ள நான்கில் 1) யக்ஞரூபிணி, 2) சியாமளை,

3) மகேஸ்வரி 4) மனோன்மணி எனக் காட்சி தருகின்றனர். திருமலை மன்னரின் பட்டத்துத் தேவியர், உருத்ரை, தோணியம்மை ஆகிய இருவரால் இம்மண்டபம் கட்டப்பட்டதாகும். இம்மண்டபத்தின் மேல் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர், திருக்கல்யாணக்காட்சி, மலையத்துவஜன் மன்னனும், சோழன் சூரசேரன் மகள் காஞ்சன மாலையும், செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தீயில், குழந்தை வடிவாய் வந்துதித்த தடாதகை மீனாட்ஷியம்மை அரசியாக மூடிசூட்டப்பெறுதல், ஆட்சி நடத்துதல், திக்விஜயம் வீர உலாச் செய்வதும், இறைவனைக் காண்பது, சோமசுந்தரர் ஆட்சி நடத்துவது, மகன் உக்ரபாண்டியன் பிறப்பு, முடிசூட்டல், ஆட்சி என சுதைகள் மற்றும் வண்ண ஓவியங்களாய் முகப்பிலேயே சரித்திரம் கூறிக் கொண்டு இருக்கின்றன.

இந்த அட்டசக்தி மண்டபம், ஒட்டிய வடக்குப் பகுதியில் இருந்த சுவாமிசன்னதி கோபுரம் வரை ஒரு மண்டபம் இருந்தது. அதில் அன்னதானம், பல நித்திய கைங்கரியங்கள் நடைபெற்று வந்ததாய் திருப்பணிமாலை கூறுகிறது. இந்த மண்டபம் தற்போது இங்கில்லை. அவ்விடம் முழுவதும் கடை, நந்தவனம், காந்திசிலை, போன்ற அமைப்புகளோடு இருக்கின்றன. இம்மண்டபத்தைக் கடந்து நாயக்கர் மண்டபம் செல்வோம். விஜயரெங்கச் சொக்கநாத நாயக்கரின் தலைமை அலுவலருள் ஒருவரான மீனாக்ஷி நாயக்கர் பெயரால் கட்டப்பட்ட இணைப்பு மண்டபமாகும். இதன் நீளம் 160அடி, அகலம் 110அடி, கொண்டது. கி.பி. 1707-ல் கட்டப்பட்டதாகும். மொத்தத் தூண்கள் 110. உள்வாசல் முகப்பில் வல்லபை கணபதி, சண்முகரை வணங்கியபடி நடை தொடர்வோம். 6 வரிசைத்தூண்களோடும் மேலே யாழிகளும், சிறுசிறு சிற்பங்களுமுடைய இம்மண்டபத்தில் தற்போது வலதுபுறம், பூக்கடைகள் உள்ளன.

இடதுபுறம் பெண்கள், குழந்தைகளுக்கான வளையல், குங்குமம், மஞ்சள், அலங்காரப் பொருட்கள், மாலைகள், பொம்மைகள், கோயில் சம்பந்தப்பட்ட படங்கள், பித்தளையால் ஆன விளக்குகள், சிறு சிற்பங்கள், மற்றும் விளையாட்டுப்பொருட்கள், என பலப் பல விற்பனைபுரியும் கடைகள் நிரம்பிருக்கின்றன. திருக்கோயிலின் பெருவிழாக்கள் நடத்தப்பட வசதியான இடமாகவும் அதற்கு என்றே அமைக்கப்பட்டதாகவும், உள்ள இம்மண்டபம், விஸ்தீர்ணம், அதிக கொள்ளவு கொண்டது, மண்டப மேல்விதானத்தில் மேற்கில் சதுரவடிவில் அதிநூதன முறையில் அமைக்கப் பெற்ற பன்னிரு ராசிகளைப் பார்க்கலாம்.

இதைக் கடந்து செல்கையில் கரந்தை முதலியார் மண்டபம் முதலி மண்டபம் என்றும் இருட்டு மண்டபம் என்ற காரணப்பெயரும், கொண்ட இதனைகட்டுவித்தவர் கரந்தை முதலியார் என்பவர், காலம் கி.பி. 1613. டிரஸ்டி சிவகங்கை மைநர் ஜமீன்தார் மகா ஸ்ரீ ஸ்ரீ மது விஜய ரெகுநாததுரை சிங்கமாகிய கொரிவலலபத்தேவர்கள் மேற்படி மீனாக்ஷி நாயகரவாகன் வாரிசு பங்காரு திருமலை நாயக்கர் வகையறா சாலிவகன் சகாப்தம் சூ அ ள உயகவினம் பி சூகார்தி தை பூஸ உ சோமவாரம் தீபம் போடப்பட்டது.

1898-ம் வருடம் நவம்பர் மாதம் 21ம் தேதி.இவ்விணைப்பு மண்டபத்தினுள் இறைவன், இறைவி, வேடன், வேடுவத்தியாகவும், வந்து, ஒரு மாபாவிக்கு அருள்செய்ததை விளக்கும் வகையில் உள்ள அழகிய சிற்பங்களைக் கொண்டதாகும் கரந்தை முதலி, மண்டபத்திலுள்ள சிற்பங்கள். 1. பிட்ஷாடனர் - பிச்சைப் பெருமானார் 2. மோகினி - அழகுமங்கை, 3. முனிவர் 4. அனுசுயா 5. கரந்தை முதலியார் என மொத்தம் எட்டு சிற்பங்கள் உள்ளன. இவற்றுள் மோகினியின் அழகு உருவம் உயிர்த்தோற்றப் பொலிவில் காட்சி தருவதைக் காணலாம். இதனைத் தொடர்ந்து செல்கையில் பொற்றாமரைக்குள தீர்த்த மகிமை நம்மை கவர்ந்திழுக்கிறது.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 10. திருக்கோயில் தரிசனம் »

பொற்றாமரைக்குளம் செப்டம்பர் 07,2018

இதன் நீளம் 165அடி அகலம் 120 அடி, நான்கு மருங்கிலும் உள்ள மொத்தப் படிகள் அனைத்தும் அழகுற அமைக்கப்பட்டவை. ... மேலும்
 
1.      கிழக்கு       -        இந்திரன்    -        ... மேலும்
 
அன்னை ஸ்ரீ ராஜ மாதங்கியின் ஸ்ரீ மீனாக்ஷியின் கர்ப்ப கிரஹ வெளிப்பிரஹார நடைபாதைச்சுற்றில் அமைந்த ... மேலும்
 

கம்பத்தடி மண்டபம் செப்டம்பர் 07,2018

இம்மண்டபம் சொக்கநாதர் திருவாயிலுக்கு நேர்கிழக்கே உள்ளது. இதற்கு நந்தி மண்டபம் என்றும் வீரப்ப மண்டபம் ... மேலும்
 

நால்வர் மண்டபம் செப்டம்பர் 07,2018

தெற்குப் பிரகாரம் தொடக்கத்தில் கிழக்குப் பக்கம்1. மாணிக்க வாசகர், 2. சுந்தரர், 3. நாவுக்கரசர், 4. ஞான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar