Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோயில் தரிசனம் திக் பாலகர்களின் வாகன விபரம்
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 10. திருக்கோயில் தரிசனம்
பொற்றாமரைக்குளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2018
05:09

இதன் நீளம் 165அடி அகலம் 120 அடி, நான்கு மருங்கிலும் உள்ள மொத்தப் படிகள் அனைத்தும் அழகுற அமைக்கப்பட்டவை. குளத்தைச்சுற்றிய பிரகாரங்களையும், (நடைபாதை மண்டபம்) கட்டியவர்கள், விஸ்வநாத நாயக்கர் மன்னர் காலத்தில் பெருமாள் என்பவர். கி.பி. 1652-ல் அம்மன்சன்னதி செல்லும் வழி. வடக்குப்பிராகாரம், மற்றும் குளப்படிகளையும்) வீரப்பநாயக்கர் ஆட்சி காலத்தில் குப்பையாண்டி என்பவர் கி.பி. 1573-ல் கட்டினார்கள். இதன் கிழக்குப் பிராகாரத்தில் சற்றேறத்தாழ நடுவில் நின்று பார்த்தால் மேலே எதிரில் ஸ்வாமி, அம்பாள், தங்க விமானங்களைக் கண்குளிர தரிசிக்கலாம். இதற்கென கீழே அடையாளமிட்டிருக்கிறார்கள். இதே ஆட்சி காலத்தில் கி.பி. 1578ல் தெற்குப் பிராகாரத்தையும், குளப்படிக் கட்டுகளையும் கட்டுவித்தார் அப்பன்பிள்ளை என்பவர் ஆவர்.

திருவிளையாடல் புராணத்தில் மையக்கருவாய் விளங்குவதே மூலலிங்கரூப நாயகனாம் தான் தோன்றி சுந்தரேசப் பெருமானாரும், அவர் பக்கலேயமைந்த பொற்றாமரைக்குளமும், இந்திரன் பூசிக்கவும் இதர புராண கதை பாத்திரங்களுக்காவும், இறைவனாலேயே உருவாக்கிய தீர்த்தக்குளம். இதன் சிறப்பை முழுவதும் எவரால் கூறவியலும். இப்பொற்றாமரைக்குளம் தேவர்கோமான் இந்திரனின் சாபம் தீர்ந்தது. நக்கீரர் புலவர் பெருமான் தமிழிற்காக இறையோடு வாதாடி அவ்விறையின் நெற்றிக்கண் தீயினால் கருகி மறைந்த போது, அவரை உயிர்ப்பித்து மீண்டும் புதுப்பொலிவுடன் எழச்செய்ய காரணமானது. இக்குளமே தங்கத் தமிழின் சங்கப்பலகை இக்குளத்தில் பொருந்த அஃதில் திருக்குறள் அரங்கேறியதும் இத்திருக்குளத்திலே. தவளை, மீன்கள் என நீர்வாழுயிரினங்களற்ற தண் தடாகம் இது.

திருஞானசம்பந்தர் முதல், குருஞானசம்பந்தர், திருநந்தியார், அடியார்கள், அனைவரும் இதில் முழ்கி எழுந்த போதெல்லாம் இறையருள் உடலெங்கும் தங்கியணைந்த தங்கக்குளம் இது. தங்கத்தாலான தாமரையை மிதப்பித்ததும் இதிலே, திருபனந்தாள்திருமடத்தாரால் ஆதியில் ஒரு தங்கபூவும் இதில் மிதக்கவிட்டிருந்தாக வரலாறு கூறுகிறது. பெயருக்கேற்ற பொற்றாமரையே இது. குளத்தின் நடைமண்டப வடபுறச் சுவற்றிலும், கிழக்குப்புறச் சுவற்றிலும், 64 திருவிளையாடல், புராணங்களைச் சித்தரிக்கும் மூலிகைச்சாற்றினால் வரையப்பட்ட கி.பி. 1894-ல் வண்ணச்சித்திரங்களைக் கொண்டதாகும். அவைகள் காலத்தால் சிதைந்தழிந்திருந்தாலும், பாதுகாக்கப்பட வேண்டியும் கருதி அதிற் சிலவற்றை ஆயிரங்கால் காட்சி மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளன எனச் செய்தி.

வடபுறச்சுவரில் மேற்ச்சொன்ன சித்திரங்களை பழமையைப்போன்று புதிதாய் வரையத்துவங்கி முடிவடையாத நிலையில் உள்ளது. இதில் மீனாக்ஷி  கல்யாணக் காட்சியில் பெருமாள் பெருமானுக்கு அன்னையை தாரைவார்க்கும் தருணம் திருக்கரங்கள் இம்மானுட வழக்கத்திற்கு மாறாக உள்ளதைக் காணலாம். தென்புற நடைமண்டபச் சுவற்றில் திருப்பனந்தாள் மடத்துத் தலைவர் அருள்நந்திதம்பிரான் அவர்களால் ””சிவஞானபோதம்”, திருக்குறள், அபிராமி அந்தாதி, மதுரைத்தலம் பற்றிப் பாடப்பட்ட தேவாரப் பதிகங்கள், ஆகியவகைகளின் பாக்களை சலவைக்கல்லில் தீட்டப்பட்டு பதிக்கப்பட்டிருக் கிறது. ஏடு எழுத்தாணிகளுடன் சங்கப்புலவர்களின் உருவங்கள் மண்டபத்தூண்களில் சிலவற்றில் காணலாம். விழாக்காலங்களில் பொற்றாமரைக் குளநீர் தீர்த்தவாரியாகவும் திகழும்.

கி.பி. 1600-தருமை ஆதீன ஞானசம்பந்தருக்கு இறைவன் கனவில் தோன்றி கூறியதற்கிணங்க அவர் பொற்றாமரையில் மூழ்கி எழுகையில் கரங்களில் சிவலிங்கப் பெட்டகம் கிட்டிய குளமாகும். சம்பிரதாயப்படி முறைபடுத்தப்பட்ட வழக்கப்படி, பொற்றாமரைக் குளத்தின் தென்புற நடைபாதை மண்டபம் வழி நடந்து விபூதி விநாயகரை வலம் வந்திடுவோம். திருக்கோயில் தெற்குவாயில் நுழைவின் இடப்புறம் மூலையில் தென்மேற்கு கிளிகள் வளர்க்கப்பட்ட கூண்டு இருந்தது. வரும் பக்தர்கள் அவ்வழகிய கிளிகளைப் பார்த்து மீனாக்ஷி , மீனாக்ஷி என்றும், மீனாக்ஷி யைக் கள்வர் கொண்டு போயினர் என்றும் கூறுகையில் அக்கிளிகள் மீனாக்ஷி என்று ஏகமாக ஒலி எழுப்பி சுறுசுறுப்படைந்து கூட்டினுள்ளே படபடவெனப் பறக்கும் காட்சி அன்னையின் மீது கொண்ட ஆழ்ந்த அன்பை அவைகள் வெளிக்காட்டுவதாக இருக்கும். இது முந்தையக் காலக்கதை,

தற்போது அங்கு அக்கிளிக்கூண்டு இல்லை. காரணம், பறவை, விலங்குகளை அடைத்துவைப்பது பற்றிய அரசின் சட்டம் காரணமாக இருக்கலாம். பின் அங்கிருந்தபடி இடபக்கம் திரும்பிப் பார்க்கிறபோது ஸ்ரீ காசி விசாலட்சி ஸ்ரீ காசிவிஸ்நாதரும் அருள்பாலிக்கின்றனர். தெற்குப்பார்த்தபடி அம்மை ஸ்ரீ விசாலாட்சியும், கிழக்குப் பார்த்தபடி அப்பன் ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயிலுள்ளது. இதே போல் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் என்ற ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலும், மீனாக்ஷி கோவிலிலுள்ள ஸ்ரீ காசிவிஸ்நாதர் விசாலாட்சி திருக்கோவிலும் ஒரே அச்சாக அளவு மாறாது அப்படியே அமைத் துள்ளார். இவ்விரு கோயில்களும், ஒரே காலத்தில் ஒரே ஸ்தபதிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ மீனாக்ஷி சோம சுந்தரரேஸ்வரரின் திருமணத்திற்கு வடக்கிலிருந்து வந்திருந்த ஸ்ரீ பதஞ்ஜலி, ஸ்ரீ வியாக்ர பாதர் முனிவர்கள் அம்மையப்பனை தரிசனம் செய்து ஆடவல்லான் திருநடனம் காணாது உணவு உண்பதில்லை எனச் சொல்லக் கேட்ட இறைவன் கால்மாறிய கோலத்திலேயே இவ்விரு முனிவர்களுக்கும் நர்த்தனக் காட்சி நல்கிய பின் பதஞ்ஜலி முனிவர் இப் பழங்காநத்தம் கோயிலுக்கு வந்து தவம்புரிந்ததாயும், செவிச் செய்தி வழக்கிலும், பதஞ்ஜலி ஏட்டுச் செய்தியிலும் உள்ளது. மேலும், பதஞ்ஜலி மகரிஷி மதுரை வந்தபோது அம்மையப்பனையும், பொற்றாமரைக் குளத்தையும், புகழ் கூறும் விதமாய்ப் போற்றிப்பாடிய ””பதஞ்ஜலி ஸ்தோத்திரம்” இன்றளவில் பழங்காநத்தம் கோவிலில் பாடப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நம் பார்வை திருக்குளத்தின் மேற்குப் பகுதியில் ராணிமங்கம்மாள் கட்டுவித்த முகமண்டபம் ஆடல் மண்டபம் இம் மண்டபத்தில் ராணி மங்கம்மாளின் உருவமும், அவர் மந்திரியார் ராமைய்யரின் உருவமும் காணப்படுகின்றன. இம்மண்டபம் மேல் விதானத்தை ஒட்டிய பக்கச் சுவர்களில் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணக் காட்சி, திருவிளையாடல் காட்சிகளை ஓவியமாகப் பழங்காலத்தில் வரையப்பட்டுள்ளது. அஷ்டதிக்கு பாலகர்கள் அவரவர் வாகனங்களுடன் இதில் வரையப்பட்டிருப்பதையும் காணலாம்.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 10. திருக்கோயில் தரிசனம் »

திருக்கோயில் தரிசனம் செப்டம்பர் 07,2018

அங்கயற்கண்ணி, பங்கையர்ச்செல்வி, அன்னை ஸ்ரீ மீனாக்ஷியையும், அய்யன் சொக்கேஸ்வரரையும், மனம் நினைக்கின்ற ... மேலும்
 
1.      கிழக்கு       -        இந்திரன்    -        ... மேலும்
 
அன்னை ஸ்ரீ ராஜ மாதங்கியின் ஸ்ரீ மீனாக்ஷியின் கர்ப்ப கிரஹ வெளிப்பிரஹார நடைபாதைச்சுற்றில் அமைந்த ... மேலும்
 

கம்பத்தடி மண்டபம் செப்டம்பர் 07,2018

இம்மண்டபம் சொக்கநாதர் திருவாயிலுக்கு நேர்கிழக்கே உள்ளது. இதற்கு நந்தி மண்டபம் என்றும் வீரப்ப மண்டபம் ... மேலும்
 

நால்வர் மண்டபம் செப்டம்பர் 07,2018

தெற்குப் பிரகாரம் தொடக்கத்தில் கிழக்குப் பக்கம்1. மாணிக்க வாசகர், 2. சுந்தரர், 3. நாவுக்கரசர், 4. ஞான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar