Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மீனாக்ஷி வரலாற்றினைக் கற்பலகை ... நால்வர் மண்டபம்
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 10. திருக்கோயில் தரிசனம்
கம்பத்தடி மண்டபம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2018
05:09

இம்மண்டபம் சொக்கநாதர் திருவாயிலுக்கு நேர்கிழக்கே உள்ளது. இதற்கு நந்தி மண்டபம் என்றும் வீரப்ப மண்டபம் என்றும் பெயர் உண்டு. மண்டப மையத்தில் தங்கக் கொடி, மரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. இது விஸ்வநாத நாயக்கர், கிருஷ்ணப்ப நாயக்கர் மகன் வீரப்ப நாயக்கரால் கட்டப்பட்டுள்ளது. காலம் கி.பி. 1583, சக 1505 ஆண்டு

பிற்காலத்தில் நாட்டுக்கோட்டை ஏழு கோயில் நகரத்தார்கள் எட்டுத்தூண்களை உடைய மண்டபத்தை பதினாறு தூண்களாய் சிறிதும் வித்தியாசமின்றி இணைப்புப்படுத்தி அழகிற்கு அழகூட்டினார்கள். அதிகப்படுத்தப்பட்ட தூண்கள் எட்டும் ஏற்கனவே அமையப்பெற்ற தூண்கள் ஒவ்வொன்றினையும் ஒட்டியே அமைக்கப்பட்டது. இத்தூண்களின் மத்தியில் நான்கு கால் மண்டபம் நந்தி மண்டபம் அமையப்பெற்றுள்ளது. இந்நந்தி மண்டபத்தினை எப்பக்கம் இருந்து நோக்கிடினும் சிற்ப முறைகளை நுட்ப செதுக்கல்களால் சீர்பெற்றுள்ளன என்பதை அறியலாம். இதிலுள்ள தூண்களில் காணப்படும் குழைவும், வளைவும் மண்டபக்கூரையின் மேற்புரமும், அடிப்பாகமும் மர வேலைச் சேர்மானம்போல் கல்லில் உருவாக்கியிருக்கிறார்கள்.

உத்திரம், சட்டம், விட்டம், தகடு, சங்கிலி ஆணி என அனைத்தும் கற்செதுக்கல்களினாலயே உருவாக்கம் பெற்றிருக்கிறது. இதனின் சிறப்பை மேலும் கூட்டுவதாக மண்டப மேற்பாவுக்கல் ஒரே கல்லினால் ஆனது. மதுரை திருக்கோவிலின் மிக சிறப்பு வாய்ந்த சிற்பங்கள் என உலகோர் போற்றும் வண்ணம் உயிரோட்டம் பெற்றொளிரும் சிற்பங்களை சாதாரணமாய்க் கல்லின் கலை வண்ணம் எனக் கூறுதல் பொருந்தாது. இச்சிறப்பு மிக்க சிற்பங்கள் பெரிதும் மகேஸ்வர விளக்கங்களாய் ஆகமச் சான்றுகளாய் காணப்படுகின்றன. மண்டபத்தூண்கள் ஒவ்வொன்றின் சுற்றுக்களில் உள்ள சிற்பங்களை கிழக்கு தொடங்கி வடக்கு வரை வல வரிசையாக சிற்ப வரிசைகளையும் விபரங்களையும் காண்போம்.

தென்புறத்தூண்கள்:

தூண் 1 : தென்புறத்தூண்களில் கிழக்கில் இருந்து மேற்காக முதலில் மீனாக்ஷி யம்மை திருமணத் திருக்கோலம். தொடர்வலமாக முப்புரம் எரித்த சிவபிரான் திரிபுராந்தகர், சோம சுந்தரர்.

தூண் 2 : மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த கோலம் காலனை அழித்த காட்சி, கால சம்ஹாரர் அமைதிக்கோலர் சுகாசனர்

தூண் 3 : நந்திக்குடமுழா தட்டும் காட்சி, கூத்தப்பெருமான் நடராஜர் காமனை எரித்த கோலம் காம தகனர்

தூண் 4 : அரி அயன் அறியாதவர் இலிங்கோத் பவர் காளைக்கருளியவர் ரிஷபாந்தகர் நிலவணிந்தோன் சந்திர சேகரர் கயிலைப் பெருமான் கைலாச ஆருடர்

வடபுறத்தூண்கள்

தூண் 5 : ஓரடிப்பெம்மான் ஏக பாத மூர்த்தி, விடையேறியவர் ரிஷபாரூடர்,

3. ஆழியங்கையர் சக்ராதரர், 4. உமையொரு பாகர் அர்த்த நாரீஸ்வரர், 5. அரிஅயன் சங்கர நாராயணர்

தூண் 6 : சலந்திர அனுக்கிரஹர், தென்முகக்கடவுள் தக்ஷிணா மூர்த்தி

தூண் 7 : கரியுரி போர்த்தியவர் - கஜ சம்ஹாரர்

தூண் 8 : பிச்சைப்பெம்மான் பிக்ஷாடனர் உருத்திரர், வேடர் பெருமான் அர்ச்சுனன் கிராத அர்ச்சுனன் அம்மையப்பர் முருகர் சோமாஸ்கந்தர்

அதற்குப் பக்கலே அமைந்த பல அரிய அதிசய சிற்ப சாஸ்திரங்களை அதன் நுணுக்கத்தோடு சிலை வடிவில் தூண்களில் வாழ வைத்திருக்கும் அற்புதங்களாய் ஆகம நெறியின் பெருவிளக்கங்களின் உயிர்த்துடிப்பான சிற்பங்களை அக்னி வீரபத்திரர், அவரின் கீழே அஷ்ட பைரவர்கள் 1. மஹா மர்த்தன பைரவர், 2. பஞ்ச வக்த்ர பைரவர், 3. ரவி பட்சக பைரவர், 4. ஏகானந்த பைரவர், 5. மஹா சண்ட பைரவர், 6. நமோ நிர்மல பைரவர், 7. டமரு பாஸ்கர பைரவர், 8. பட்கார பைரவர், கால பைரவம் என்ற 8 அங்கங்களாய் பரமசிவனிடம் இருந்து இவர்கள் தோன்றியவர்கள் என பெரியோர்கள் கூறுவார்கள்.

அஷ்டமா சித்திகளை வழங்குபவர்களாயும் அருள்பாலிக்கும் இவர்கள் 1. அசிதாங்க பைரவர், 2. குரு பைரவர் 3. சண்ட பைரவர். 4. குரோத பைரவர் 5. உன்மத்த பைரவர்,

6. கபால பைரவர், 7. பீஷண பைரவர். 8. சம்ஹார பைரவர் எனவும் இவர்கள் பல்பெயரில் விளங்குகிறார்கள். தொடர்ந்து அருகே அடுத்த தூணில் அகோர வீரபத்திரர். ஊர்த்துவதாண்டவர், மஹா காளி இறைவனுக்குப் பத்துத் திருக்கரங்களும் காளியம்மைக்கு எட்டுக்கரங்களும் கொண்டிருப்பதோடு காளியின் காலடிக்கு கீழ் வாத்தியங்களுடன் நடனக்கோலத்தில் பலர் உள்ளனர். தூணில் வெளிவருவது போல அமைந்த தெற்கு நோக்கிய வீர ஆஞ்சநேயர் ஆகியோர்கள் நின்று அனுக்கிரஹம் செய்கிறார்கள். இதற்கு அடுத்து வருவதே நால்வர் மண்டபம்.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 10. திருக்கோயில் தரிசனம் »

திருக்கோயில் தரிசனம் செப்டம்பர் 07,2018

அங்கயற்கண்ணி, பங்கையர்ச்செல்வி, அன்னை ஸ்ரீ மீனாக்ஷியையும், அய்யன் சொக்கேஸ்வரரையும், மனம் நினைக்கின்ற ... மேலும்
 

பொற்றாமரைக்குளம் செப்டம்பர் 07,2018

இதன் நீளம் 165அடி அகலம் 120 அடி, நான்கு மருங்கிலும் உள்ள மொத்தப் படிகள் அனைத்தும் அழகுற அமைக்கப்பட்டவை. ... மேலும்
 
1.      கிழக்கு       -        இந்திரன்    -        ... மேலும்
 
அன்னை ஸ்ரீ ராஜ மாதங்கியின் ஸ்ரீ மீனாக்ஷியின் கர்ப்ப கிரஹ வெளிப்பிரஹார நடைபாதைச்சுற்றில் அமைந்த ... மேலும்
 

நால்வர் மண்டபம் செப்டம்பர் 07,2018

தெற்குப் பிரகாரம் தொடக்கத்தில் கிழக்குப் பக்கம்1. மாணிக்க வாசகர், 2. சுந்தரர், 3. நாவுக்கரசர், 4. ஞான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar