Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொற்றாமரைக்குளம் மீனாக்ஷி வரலாற்றினைக் கற்பலகை ...
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 10. திருக்கோயில் தரிசனம்
திக் பாலகர்களின் வாகன விபரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2018
05:09

1.      கிழக்கு       -        இந்திரன்    -        ஐராவதம்
2       மேற்கு        -        வருணன்    -        மீன்
3.      தெற்கு        -        யமன்          -        எருமை
4.      வடக்கு       -        குபேரன்     -        குதிரை
5.      தென் கிழக்கு       -        அக்னி        -        ஆடு
6.      வடமேற்கு -        வாயு -        மான்
7.      வட கிழக்கு          -        ஈசானன்     -        காளை
8.      தென்மேற்கு        -        நிருதி -        பூதம்
 
இம்முக மண்டபத்திற்கு எதிர்புறம் காசிவிஸ்வநாதர் கோயிலைத் தொடர்ந்தும் வடக்கு நோக்கி நடக்கிறோம். இடபக்கம் செவந்தீஸ்வரர் கோயில் மேற்கில் உள்ளடங்கிய நிலையிலும், முன்பகுதியில் பூந்தோட்டமும், தேவாரம் பாடசாலையும், இருந்தன. தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தைப் பார்ப்போம். இறைவன், இறைவியை, ஊஞ்சலில் இருத்தி ஊஞ்சலாட்ட நிகழ்ச்சி வெள்ளிக்கிழமைதோறும் நிகழ்வு பெறுகிறது. இவ்ஊஞ்சல் மண்ட நடைபாதை மண்டபத் கற்தூண்களில் சிறிய சிறிய பலவித சிற்பங்கள் அறிய பலகருத்துக்களை கூறுவதாகும். அவைகளில் சிலவாக வணக்கமுறைகளைக் காட்டி நம்மையும் வணங்க வைக்கின்றன. தலைக்கு மேல் இருகரங்களை உயர்த்திய வணக்கம், நெஞ்சுக்கு நேர் கைகுவித்து வணங்குவது, சடை முடியார், மொட்டைத் தலையர், தலைப்பாகை வைத்தவர், கிரீடம் சூட்டியவர், ஆகியவர்கள் ஒவ்வொருவரும் வணங்கிய நிலைச் சிற்பங்கள், வில் ஏந்தியபடி வணங்குவது மற்றும் விழுந்து, மண்டியிட்டு, வணங்குதல், ஆடிக்கொண்டும், பாடுவதுபோலும் வணங்குதல், குரங்கு முகத்தவராய், காளையராய், இப்படி பலப்பலவாய் வணங்குதல் இலக்கணங்களை வடித்து வைத்துள்ள சிற்பிகளைப்பார்த்து, நினைத்து நம்மால் வணங்காமல் இருக்க முடியுமா?

இம்மண்டபத்தை கடந்து மேலும் வடக்கு நோக்கிச் செல்ல கிளிக்கூட்டு மண்டபத்தை பார்ப்போம். கிளிக்கூட்டு மண்டபம், யாளி மண்டபம், எனவும் இதை அழைப்பதுண்டு. இம்மண்டப மேற்கூரையில் விதானத்தில் ஏராளமான பல இறையுருவங்கள் வண்ணக்குவியல்களாக வரையப் பெற்றிருக்கின்றன. இம்மண்டப நடைவழியின் இடம் வலம் இருமருங்கிலும் உள்ள தூண்களில் அழகிய சிற்பங்களைப் பற்றி கூறுமுன் இம்மண்டபம் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் சில பார்ப்போம்.

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர் காலம் கி.பி. 16-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரை சரியாகச் சொல்வது என்றால் 207 ஆண்டுகள். இதில் விஜயநகரப் பேரரசின் கீழ் ஆளுநர்களாக மதுரையை ஆட்சி செய்தது. கி.பி. 1529-1623 வரை, 6 நாயக்கர்கள் ஆண்டனர். 7-வதாக வந்த திருமலைநாயக்கர் 1623 முதல் 1659 வரை முழுஉரிமை பெற்று மதுரை மன்னராக ஆண்டார். அன்றைய மதுரை நாடு மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, என்ற பகுதிகள் அடங்கியதாகும். கி.பி. 1311 முதல் 1374 வரை ஆண்ட சுல்தான்கள் ஆட்சியை, குறிப்பாக மாலிக்காபூர், கியாஸ் உதீன், இமாம்பதூதா போன்றவர்கள், பாண்டியர் பலரால் கட்டிக்காத்த மதுரைக் கோயிலையும், மதுரையையும், பெருமளவு சிதைத்து விட்டனர். அக்கால அளவில், ஸ்ரீ மீனாக்ஷி  திருக்கோயிலில் வட பாகம் இருந்ததாகக் கருதப்படும் கரிய மாணிக்கப்பெருமாள் சன்னதி மண்டபங்களும், இடித்துச் சிதைக்கப்பட்டுக் கிடந்த அப்பெருமாள் சன்னதியில் இருந்த மண்டபத் தூண்களை உபயோகித்துத்தான் இச்சங்கிலி மண்டபம், கிளிகூட்டு மண்டபம் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வர்கள் கருதுகிறார்கள். அப்படிக் கட்டப்பட்ட மண்டபத்தூண்களில் உள்ள சிற்பங்களை இப்போது பார்ப்போம்.

மொத்தத் தூண்கள் 28. தருமர், அருச்சுனர், வில்லேந்திய கோலத்தில் எதிர் எதிராகவும், அடுத்து நகுலர், சகாதேவரும், அவ்வண்ணமே நிற்றலும், பஞ்சபாண்டவருள் ஐந்தாமவராக கதையுடன் பீமன் வீமன் பலிபீடத்தில் முன்பாக நிற்கிறார். எதிராக புருஷா மிருகம், மனித விலங்கு எனவும் நிற்கின்றார்கள். அழகான சிற்ப வேலைப்பாடும், அளவிற்கு பெரியதான இவர்களைக் கண்டதுடன் அடுத்ததாக அம்மன் சன்னதி. நுழைவாயின் முன்பாக, சித்தி வினாயகரும், கூடற்குமாரரும் இணைந்து அருள்தர, அன்னையைத் தரிசிக்க பேரார்வம் கொண்டு வேம்பத்தூரார் கோபுரம், வழியாக அம்மன் சன்னதி, நுழைந்து 2ம் பிராகாரம் திருச்சுற்றடைந்து துவஜஸ்தம்பம் கொடிமரத்தை அடிமுடியும் நடுவுமிலா அகண்ட பரம்பொருள் நெடிது நின்றார்ப் போல் நிற்பதை கீழும் மேலும் பார்த்தபடி இடப்புறமாக நடப்போம்.

முதலில் உருத்திரை தோணியம்மை என இரு மனைவியர்களுடன் திருமலை மன்னர் வணங்கியப்படி நிற்கும் மணிமேடை தென்கிழக்கு மூலையில் காணுகிறோம். தொடர்ந்து செல்ல நவராத்திரி கொலுமண்டபம் கண்டு தென்மேற்கு மூலையில் உச்சிஷ்டப் பிள்ளையார், கூத்த பிள்ளையார் என இரு விநாயகர்களையும், தொழுது வடமேற்குமூலை சென்று முத்துக்குமாரரையும், வணங்கியப்படி தியானநிலையில் இருக்கும் சண்டீகேஸ்வரியம்மையை விழிப்பேற்றும்வகையில் சப்தமெழுப்பி நாம் வந்ததையும், இறைவி அருளைப்பெற உதவும்படியும் கேட்டு அம்மை சன்னதி முன்னேயுள்ள "ஆறுகால் பீடத்தை காண்கிறோம். இப்பீடத்தமர்ந்துதான் ""குமரகுருபரர் திருமலை மன்னரின் வேண்டுகோளின்படி, மீனாட்சிஅம்மைபிள்ளைத் தமிழும், மதுரை கலம்பகம் என்ற நூல்களைப் பாடினார்.

""தொகுக்கும் கடவுள் எனும் பாட்டைப்பாடி விளக்குகையில் அன்னை ஸ்ரீ மீனாக்ஷி சிறுகுழந்தை வடிவில் தோன்றி திருமலை மன்னரின் மடியமர்ந்து பாடற்சுவையும், கவிச்சுவையும் கேட்டு மகிழ்ந்து ஒருமுத்து மாலையை குமரகுருபரர் கழுத்தில் அணிவித்து மறைந்தாள். என்பது தெய்வீக வரலாறு ஆகும். குமரகுருபரர் வரலாறு பற்றித் தனியாக பின்வரும். இவ்வாறுகற்பீடத்தில் இருவாயிற் காவலர்கள் துவாரபாலகர்கள் உருவங்களையும், துவஜஸ்தம்பத்தையும், பலிபீடத்தையும், செய்தளித்து அவற்றைப் பொற் தகடுகளால் பொதியச் செய்தவர் திருமலை மன்னர். அன்னை ஸ்ரீ மீனாக்ஷியம்மனுக்குத் தனிச்சன்னதி, 6-ம் நூற்றாண்டில் கி.பி. 640 அரிகேசரி எனும் கூன்பாண்டியன் 2-ம் பிராகாரத்தையும் திருச்சுற்று சன்னதி மண்டபத்தையும், அந்நாளில் கட்டியவர் மாறவர்மசுந்தபாண்டியன். காலம் கி.பி. 1218 என்பதும் வரலாறு.

ஆறுகால் மண்டபத்தைக் கடந்து மஹா மண்டபம் அடைகிறோம். இது முதல் பிராகாரம், முதல் திருச்சுற்றாகும். பள்ளியறையும் இங்குதான் உள்ளது. மேற்கேயுள்ள கருவறையில் நுழைகிறோம். அருள்வடிவாய், ஆயகலைகள் அத்தனைக்கும் முழுவடிவாய் அறுபத்திநான்கு சக்திபீடங்கள் ஒன்றாகி மந்திரிணிபீட மஹாசக்தியாய், மரகத அம்மையாய், நின்ற திருக்கோலத்தில், கையிற் கிளியுடன் அப்பசுங்கிளியாள் தாய்மையின் புயல், பூரணத்திருமுகம் காட்டி நிற்கும் மாணிக்க மூக்குத்தியின் ஒளிக்கற்றை வழி உமிழ்கின்ற அருள் காந்தப்பார்வை வீசும் அன்னைதிருமுகம் கண்டதும், இவ்வுலகில் பிறந்த பயனைய்தியாங்கு புதுப்பிறப்பில் புகுந்தவாறு, மனம் அமைதியும், பெருமகிழ்வும் கொண்டமைந்த பாங்கை எவ்வாறு சொல்லுதற்கியலும்!

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 10. திருக்கோயில் தரிசனம் »

திருக்கோயில் தரிசனம் செப்டம்பர் 07,2018

அங்கயற்கண்ணி, பங்கையர்ச்செல்வி, அன்னை ஸ்ரீ மீனாக்ஷியையும், அய்யன் சொக்கேஸ்வரரையும், மனம் நினைக்கின்ற ... மேலும்
 

பொற்றாமரைக்குளம் செப்டம்பர் 07,2018

இதன் நீளம் 165அடி அகலம் 120 அடி, நான்கு மருங்கிலும் உள்ள மொத்தப் படிகள் அனைத்தும் அழகுற அமைக்கப்பட்டவை. ... மேலும்
 
அன்னை ஸ்ரீ ராஜ மாதங்கியின் ஸ்ரீ மீனாக்ஷியின் கர்ப்ப கிரஹ வெளிப்பிரஹார நடைபாதைச்சுற்றில் அமைந்த ... மேலும்
 

கம்பத்தடி மண்டபம் செப்டம்பர் 07,2018

இம்மண்டபம் சொக்கநாதர் திருவாயிலுக்கு நேர்கிழக்கே உள்ளது. இதற்கு நந்தி மண்டபம் என்றும் வீரப்ப மண்டபம் ... மேலும்
 

நால்வர் மண்டபம் செப்டம்பர் 07,2018

தெற்குப் பிரகாரம் தொடக்கத்தில் கிழக்குப் பக்கம்1. மாணிக்க வாசகர், 2. சுந்தரர், 3. நாவுக்கரசர், 4. ஞான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar