Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கம்பத்தடி மண்டபம் ஆலவாயன் திருக்கோயிற் பரப்பளவு
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 10. திருக்கோயில் தரிசனம்
நால்வர் மண்டபம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2018
05:09

தெற்குப் பிரகாரம் தொடக்கத்தில் கிழக்குப் பக்கம்
1. மாணிக்க வாசகர், 2. சுந்தரர், 3. நாவுக்கரசர், 4. ஞான சம்பந்தர், 5. நெடுமாறர்,
6. மங்கையர்க்கரசியார், 7. குலச்சிறையார், 8. மூர்த்தியார் ஆகியோர் உள்ளனர்.

இம்மண்டபம் இரண்டாம் பிரகாரத்தின் துவக்கத்தில் அதாவது தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. அப்பர் சுவாமிகள் சுந்தரர் திருஞான சம்பந்தர் மாணிக்க வாசகப் பெருமான் ஆகியோரின் புகழ்கூறும் மண்டபமாக சைவ நெறிகளில் சிறந்த இவர்களும் இறையனாரும் வேறல்ல எனப்பலப்பல இறையருள் அற்புதங்களை நிகழ்த்தியவர்களும் ஆதிசைவ மரபின் அருளாளர்களும் ஆவார்கள்.

அத்தோடு திருஞான சம்பந்தர் ரிக் வேத சாரமாய் திருக்கடைக் காப்பு முருகக் கடவுள் அம்சம் எனவும், திருநாவுக்கரசர் யஜுர் வேத சாரமாய் தேவாரம் பாடிய வாகீசர் திருமுனிகள் அம்சம். திரு சுந்தர மூர்த்திப் பெருமான் சாம வேத சாராமாய் திருப்பாட்டு சிவாம்சம். திருமாணிக்க வாசகப்பெருமான் அதர்வண வேத சாரமாய், திருவாசகம் பாடி நந்திதேவர் அம்சமாகவும் அமைந்தனர் என்று கூறப்படுகிறது. இவர்களால் சைவ நெறி தழைத் தோங்குவதற்கும் இறைவியையும் இறைவனையும் நெஞ்சகத்தே நீங்காது நிலைநிறுத்தி தேவாராம் திருவாசகம் போன்ற இறை மறை நூல்களை இசையோடு பாடியவை இவ்வுலகிற்குத் தந்த மாமணிகளை இம்மண்டபத்தே நாம் என்றென்றும் சிந்தித்து நினைவு கூறும் வண்ணம் அமையப்பெற்றதே இம்மண்பத்தின் சிறப்பாகும்.

மேலும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வழிகளில் இறையை காண்பதற்கும், தாச மார்க்கம் சத்புத்திர மார்க்கம் சக மார்க்கம் சன்மார்க்கம் என நான்கு உறவுகளில் இறைவனோடு கலக்கிற ஆன்ம ரகசியங்களை பிறர்க்குச் சொன்னவர்களில் இவர்கட்டு நிகர் இவர்களே. குறிப்பாக அப்பர் சுவாமிகள் சரியை மார்க்கத்தினையும், சுந்தரர் சக மார்க்கத்தினையும், திருஞானசம்பந்தர் சத்புத்திரமார்க்கத்தையும், மணிவாசகப் பெருமான் சன்மார்க்கத்தையும், தத்தம் இயல்புகளில் ஆண்டு அனுபவித்து பிறர்க்கும் கூறிய ஞான வள்ளலார்கள் ஆவார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட விழாக்களும் கோவில் உட்புறம் மற்றும் வெளிச்சுற்றுகள் ஆகியவற்றில் இவர்கள் எழுந்தருளும் விழாக்கள் பற்றி இந்நூலில் பின்வருகின்றன.

இப்போது பேராலயத்தின் தலைவன் திருவாலவாயன் சன்னதி கோபுரம் உட்புகுமுன் கோபுரத்தென்புறம், வடபுறம் முறையே திருவருட் பிள்ளையாரும் வடபக்கம் இறைமகனார் பழனியாண்டவரும் இருவருமாய் ஆசி கூற கோபுர வாயில் நோக்கி அடியெடுத்து வைக்கிறோம். நல்லாசி பெற்ற நாம் மேலும் தொடர அனுமதி அளிக்க நிற்கிறார்கள். வாயிற்காவல் தெய்வமென வனப்பும், வலிவும் 12 அடி உயர நெடிய வடிவமும் கொண்ட ஆட்கொண்டார், உய்யக்கொண்டார், என துவாரபாலகர் இருவர் உள்ளனர். இவ்விருவரை அமையச்செய்தவர் திருமலைமன்னர் ஆவார்.

கோபுரத்தினுள் இடப்பக்கம் அதிகார நந்தியாரை தரிசித்து உட்புகுவோம். கோபுர வாயில் முடிந்து மேல்புறம் சுவரை ஒட்டிய நிலையில் உயர்ந்து அழகிய வடிவில் ஸ்ரீ பதஞ்ஜலி முனிவரும் ஸ்ரீ வியாக்ரபாதரும் இருபக்கம் நிற்கக் காண்கிறோம். பின் பிரகாரம் வலம் வர துவக்கத்தில் இடது புற வரிசையாக பஞ்ச லிங்கங்கங்கள், உஷைதேவி, சூரியர், பிரத்யுஷை தேவி (இவர்களே சாயாதேவி, சமிக்யாதேவி) எனவும் அழைக்கப்பெறுபவர் ஆவார்.

சேக்கிழார் பெருமான், தொடரும் தென்புறப் பிரகாரத்தில் அறுப்பத்து மூவர் லிங்கேஸ்வர், அப்புலிங்கம் சகஸ்ர லிங்கம் 1000 முகலிங்கம் கல்விக் கடவுள் அன்னை சரஸ்வதி அம்மை, வீரபத்திரர், சப்த மாதர்கள் பிராம்ஹி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி, ஆக எழுவர் எழுந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் தரிசித்து பின் எதிர் வலதுபுறம் மஹா மண்டப வெளிச்சுற்றில் அமர்ந்து அருள்பாலிக்கும் தட்சிணா மூர்த்தியை தரிசிப்போம். தென்கோடிப் பிரஹார மூலையில் இரட்டைப் பிள்ளையாரும், மேற்குப் பிராகார துவக்கத்தில் திருக்கோவில் உற்சவர்களான அம்மையப்பர், முருகப்பெருமான் இரு துணைவியருடன், சோடச லிங்கம் என இவ்வனைவரையும் தரிசிப்போம். எதிர்புறம் மஹா மண்டபச் சுவரில் லிங்கோத் பவரையும் தரிசித்தபடி, தொடரும் மேற்குப்பிரகார வரிசையின் இடப்புறத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பஞ்சமுக லிங்கங்கள், முத்து லிங்கம், ஜ்வர லிங்கம், சுந்தர மகாலிங்கம், பிட்சாடனர், அழகிய பளிங்கின் உருவில் விநாயகர், மயில்மேல் ஸ்ரீ முருகப்பெருமான், ஸ்ரீ காசி விஸ்வநாதர்,

ஸ்ரீ காசி விசாலாட்சி அம்மையுடன் அனைவரையும் தரிப்போம். வடக்குப் பிரகாரம் தொடங்குகிறது. முதலில் ஒன்பது லிங்க ரூபங்களையும், பளிங்கினால் ஆன தட்சிணா மூர்த்தியையும் கண்டு வணக்கம் செய்வோம். எதிர் மண்டபச்சுவர் மூன்று பக்கங்களிலும் கல்லானை கரும்பு தின்ற திருவிளையாடல் புராண படலம் விளக்கும் அழகிய யானைகளின் உருவங்களைக் காண்கிறோம்.

வடமேற்கு மூலையில் தனிச்சிறுகோயில் வலம் வரும் வசதியுடன் அமைந்த ஸ்ரீ துர்க்கைக் கோயிலின் அருகே சித்தர் பெருமான் வலக்காலைக் கீழ் ஊன்றி இடக்காலை மடித்து அதன் மேலிட்டு பீடத்தின் மேல் அமர்ந்துள்ளார். தண்டு எனும் கதையை ஒரு கரத்திலும் மந்திரக்கோலை மற்றொரு கரத்திலும் ஏந்தி அழகுமிளிர கம்பீரமும் கொண்டு தன் ஜடாமுடியை திருமுடிக் கோபுரக் கொண்டையாக்கி வட்ட முகத்தின் வளம் சேர்க்கும் தீர்க்கப் பார்வையுடன் பேசுவது போல அமைந்த அதரங்களைக் கொண்டு அருட்கோலோச்சும் அக்காட்சியைக் கண்டு பயபக்தியுடன் வணங்கி அவரை வலம் வருகிறோம். இவரை வேண்டுதல் தெய்வம் என்பார்கள். வேண்டுவார் வேண்டியபடி கிடைத்தற்கரிய கிட்டிடச் செய்யும் வேத நாயகன் அல்லவா. இச்சித்தர் கோவிலை அமைத்துத் தந்தவர் விக்கிரம பாண்டியர் ஆவார். காலம் கிபி 1315-1347

இவரை ஒட்டி சற்று உயரத்தில் அமைந்த ஸ்ரீ துர்க்கை நின்ற கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். அவரை வணங்கி பிரகாரத்தொடரில் கிழக்கு நோக்கிச் செல்லும் முன் அன்னை ஸ்ரீ துர்க்கை சன்னதிக்கு ஏறத்தாழ எதிர்புறம் காட்சிதரும் நினைவுக் கடம்பமரம் ஒன்று, அடிபாகம் வெள்ளிக்கவசமிட்டுத் தள்ளி நின்று தொடாமல் பார்க்க சுற்றி இரும்புத்தடை வேலியும் அமைத்துள்ளனர்.

கடம்பவனக்காட்டில் இந்திரனுக்கும் முனிவர்களுக்கும் மூலலிங்க நாதரின் மதுரை சரித்திரம் கூறும் சாட்சியாய் திருக்கோவிலின் தல விருட்சமாய் இஃது நிற்பதைக் காணலாம். தொடர்ந்து சண்டேஸ்வரர் சன்னதி வழக்கில் உள்ளபடி சிறு சப்தமெழுப்பி அவரை விழிப்பாக்கி நாம் வந்திருப்பதை இறையானார்க்கு உணர்த்தும் விதமாக அவரை வணங்கலாமா! சோம சுந்தரின் கர்ப்பக்கிரஹ இந்திர விமான தங்க மேற்கூரையினை கீழிருந்து தரிசிக்க வசதியாக மேல் கற்பரப்பில் லாவகமாய்ச் சிறுதுளையிட்டு தரிசன வசதிக்காக தரைப் பரப்பில் அடையாள உலோகப் பலகை ஒன்று இருந்தது. இதன் மேல் நின்று மேலுள்ள அத்துளையை நோக்கினால் அண்ணலின் தங்க விமானத்தின் பளபளக்கும் அழகினில் அருளையும் பெறலாம். கோபுர தரிசனம் முடித்துச்செல்கையில் இடதுபக்கம் முன்சொன்ன கல்யாண சுந்தரர் சன்னதி செல்லும் வழியைத் தாண்டி தொடரும் பிரகார வடபுறம் வரிசையாக கனகசபைக்கரசர் சன்னதி அட்சர லிங்கங்கள், வரிசைக்குப் பதினேழாய் மூன்று வரிசையில் 51 லிங்கங்கள், யாகசாலை கண்டு பின் அலைமகள், ஸ்ரீ மஹாலட்சுமி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

இவரை அணுகி அம்மா அருளொடு பொருட்செல்வமும் அளித்திடு என வேண்டுகிறோம். பொற்படியான் ஆடவல்லான். இரத்தின் சபாபதி, அன்னை உடன் அருளும் சன்னதி, அங்கும் வணங்கி வடக்குப்பிரகார முடிவில் ஈசான்ய மூலை வடகிழக்கு வன்னியும் கிணறும், சிவலிங்கம் சாட்சி சொன்ன திருவிளையாடல் புராணப் படலம், கல்லால் ஆன கல்லால மரம், தரிசித்தபடி தொடரும் கிழக்கின் பிரகாரத்தின் இடபுறம் தொடர்ந்து பைரவர் பூவலிங்கம் நிருத்யு லிங்கம், கார்த்திகை, சந்திரன், ரோகிணி ஆகியோரை தரிசித்த பின் மஹா மண்டபம் நுழைய இருக்கிறோம். மண்டப முகப்பிலும் பக்கவாட்டிலும் அழகிய சுதை வடிவங்கள் சில திருவிளையாடல் புராண விளக்கப் படலங்களை எதிரொலிப்பதாக உள்ளது. அண்ணலை தரிசிக்கும் ஆவலில் ஆறுகால் மண்டபம் அடைய தென்புறப் படிக்கட்டுகள் வழியாக ஏறி மண்டப நடுவில் நிற்கிறோம். இம்மண்டபம் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. இங்கேதான் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் அரங்கேறியதாக புராண வரலாறு.

சன்னதி நுழைவாயிலின் இருபுறமும் துவராபாலகர் ஐம்பொன் சிலை திருமலை நாயக்க மன்னரால் செய்தளிக்கப்பட்டது. இவ்விருவர் அனுமதியுடன் இதோ ஆலவாய் நாதனை ஆதிலிங்கனை அன்னை ஸ்ரீ மீனாக்ஷி யின் அழகில் சொக்கி நின்ற சொக்கேசனை தரிசிக்கும் பரபரப்பு மிகுகிறது. நாற்பத்தெண்ணாயிரம் சிவனடியார்கள் சூழ அவ்வவர் அன்புருகும் நெஞ்சங்களில் என்றும் நீங்காது நிலைத்து நிற்கும் பராபரனை, யாவுலக நாயகனை, தென்னாட்ட வர்க்கும் மட்டுமின்றி எந்நாட்டவர்க்கும் இறைவனை, இந்திரன் சாபம் தீர்த்த இமவானை, சோம சுந்தரனை, முக்திப்பேறளிக்க வல்லானை இதோ கண்டுவிட்டோம். ஆம் கண்குளிரக் கண்டுவிட்டோம்.

இம்மானுட உடலின் உன்னத ஊடகம் அறிவு, புத்தி, சித்தம் ஆகியவை உறையும் மனம் களிக்கின்றது. தூல உடலில் சூட்சமத்தை அறிய உதவும் ஆறு ஆதாரங்களும் குவியும் துவாத சாந்தபுரத்தில் மதுரைக்கு துவாதசாந்தபுரம் என்ற பெயரும் உண்டென்பதை இப்போது உணர வைத்த இத்தரிசனத்தில் அமிழ்கிறோம்.

மூலாதாரம்
ஸ்வாதிஷ்டானம்
மணிபூரகம்
அநாகதம்
விசுத்தி
ஆக்ஞை என்ற இவ்வாறாதார ஸ்தலங்களில் ஆரம்பம்-முடிவு என பண்ணிரென்டின் யோக நிலையினைக் குறிக்கும் முத்திரையே துவாத சாந்தம் எனவும், ஏழாவது ஆதாரமான சகஸ்ராரம் என்றவிடத்தே இறைவனும் இறைவியும் ஒன்று கூடி சங்மித்து ஒளியமுதாய் காட்சி தருமிடம் எனவும், யோகியர் உரைப்பர்.

முற்பிற் எப்பிறப்பின் இயற்றிய புண்ணியமோ இங்கே கூடி நிற்கும் பக்தியின் முத்தி விளைவோ ""நெஞ்சக்கனகல் நெக்குருகி புறக்கண்கள் நீர் சொரிய அகக்கண்கள் அண்ணலின் திருவருட் கடலில் சங்கமிக்க ஆனந்தப் பேரமைதியில் ஆன்மா சூட்சமமாக நிலைத்துவிட்டது ஆ ஆ இப்பிறவி பயனுற்றதுவே. இந் நன்நேரமே யாம் மீண்டும் புதிதாய் பிறந்தோமே. என் சொல்ல. என் சொல்ல.

""சடை மறைத்துக் கதிர்மகுடம் தரித்து நறுங்கொன்றை யந்தார்
தணந்து வேப்பந்
தொடைமுடித்து விடநாகக் கலனகற்றி மாணிக்கச்
சுடர்ப்பூண் ஏந்தி
விடை நிறுத்திக் கயலெடுத்து வழுதி மரு மகனாகி
மீன நோக்கின்
மடவரலை மணந்துலக முழுதாண்ட சுந்தரணை
வணக்கம் செய்வார்

என்று பக்கலே நின்ற பக்தர் ஒருவர் பரஞ்சோதியார் பாடலைப் பாடி அலையெழுப்பியதால் முழ்கிக்கிடந்த அருள் உலகினின்றும் இப்பொருள் உலகு விலை பேசி மன நாட்டத்தை மாற்றியது அந்தோ. எனினும் சித்தம் விலை போகவில்லை, நித்தமும் இறைவன் திரு முன் இவ்விதமே மனமுருகி நிற்பாய்! நிற்பாய்!! எனக் கூறியது. பக்தி கொண்டோர் மனம்தனை பித்தனாக்குவது என்பதும் இதுதானே. ""பித்தா பிறை சூடி என அடியார் அப்பனைப் பாடினார் அவரது பித்து அண்ணலைக் கண்டதால் எனின் அவரைக் காண்பதற்கான என் பித்தும் குற்றமற்றதே. இப்பித்தினின்றும் தெரியாமலே என்றென்றும் எப்பிறப்பும் இருத்தல் வேண்டுவோம். ஆதிசைவத்திரு அர்ச்சகரின் போற்றி ஒலி உலகியலையும் உளவியலையும் சமரசம் செய்து வைத்தது.

சுவாமி சன்னதி ஈசனின் சன்னிதானம் கர்ப்பக் கிரஹத்தின் உள்ளே வடகிழக்கு மூலையில் அன்னை மனோன்மணி பிரியாவிடை பிரதிஷ்டையாகியிருக்கிறாள். அவளருள் காட்சியின் ஒளிக்கற்றை அம்மூல லிங்க நாதர் மீது ஊடுருவியபடி இருக்கிறது. அன்னை இங்கு அமர்ந்திருப்பது அநேகர் அறிந்திலர் என அர்ச்சகர் கூறினார். யாம் பெற்ற இன்பம் யாவரும் இஃதுணரவே ஈண்டிதனை குறிப்பிட்டேன். தரிசனம் முடிந்து சன்னதி விட்டு வெளிவந்த போது வலது மூலையில் வட கிழக்கில் பஞ்ச சபைகளுள் ஒன்றான ரஜத சபை எனப்படும் வெள்ளியம்பலம் காண்போம். இவ்வம்பலம் முழுவதும் வெள்ளியால் பொதியப்பட்டுள்ளது.

ஆடவல்லான் ராஜசேகரப் பாண்டியனுக்காக பத்துக் கரங்கள் கொண்டவராய் முயலகன் மீது இடக்கால் ஊன்றி வலக்கால் வீசி நடனக்காட்சி நல்கும் வேளை அம்மை சிவகாமியம்மை அருளுக்குத் தானும் உண்டு என அழகொழுக நிற்கின்றாள். பேரண்டத்தின் இயக்க அதிர்வலை உண்டாக்கிட இயங்கிய நாயகன் திருப்பாதங்களை தரிசித்தபடி அய்யனின் எதிரில் இந்நடனம் எங்களுக்குமாகவே அருளியதன்றோ என, கூப்பிய கரங்களுடன் வலபாகமும் இடபாகமும் முறையே பாம்புக்கால், புலிக்கால் முனிவர்கள் மஹரிஷி ஸ்ரீ பதஞ்ஜலி, மஹரிஷி ஸ்ரீ வியாக்ரபாத முனி நின்றிருப்பதைப் பார்த்து வணங்கி நகருகிறோம்.

பொதுவாக திருமண வைபவங்களின்போது தம்பதியினர் முன் பார்வையாளர்களுக்காய் நடனம் நடைபெறுவதுண்டு. ஆனால் இங்கோ தன்னுடைய திருமணத்திற்காய் முனிவர்களுக்கும் அரசருக்கும் பக்தர்களுக்குமாய் மணமகன் தானே அல்லவா ஆடி மகிழ்விக்கிறார். கையிலாயம், மேருமலை, மந்திரமலை, திருக்கேதாரம் இங்கெல்லாம் தோன்றுவதற்கு முன்னரே சமஷ்டி வடிவாய் மதுரை நகர் கடம்பவனத்தில் தோன்றிய ஆதிலிங்கம் தான் தோன்றிவன் அமைந்த இவ்விடத்தை கண்டு கொண்ட இந்திரன் அடைந்த பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கி அருளிய இறையனாருக்கு கட்டிய கருவறை அளித்த விமானமே இந்திர விமானமாகும்.

இவ்விமானத்தைத் திசை ஒன்றுக்கு 2 யானைகளும், 8 சிங்கங்களும் 16 பூதங்களும் ஆக நாற்திசைக்கு 8 யானைகள், 32 சிங்கங்கள், 64 பூதங்கள் தாங்கி நிற்கின்ற அமைப்பைக் கொண்டதாகும். கொக்கேசர் மண்டபத்தின் உள்ளே வலமாக வெள்ளியம்பலம் கடந்ததும், கிழக்குப்பக்கம், தொடங்கி விழாக்காலங்களில் உலாவரும் 63 நாயன்மார்கள் உற்சவ சித்தர் பெருமான், சந்திரசேகர் ஆகியோர்களின் செப்பு, ஐம்பொன்சிலைகளாய் அமைந்தவிடம் காண்கிறோம்.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 10. திருக்கோயில் தரிசனம் »

திருக்கோயில் தரிசனம் செப்டம்பர் 07,2018

அங்கயற்கண்ணி, பங்கையர்ச்செல்வி, அன்னை ஸ்ரீ மீனாக்ஷியையும், அய்யன் சொக்கேஸ்வரரையும், மனம் நினைக்கின்ற ... மேலும்
 

பொற்றாமரைக்குளம் செப்டம்பர் 07,2018

இதன் நீளம் 165அடி அகலம் 120 அடி, நான்கு மருங்கிலும் உள்ள மொத்தப் படிகள் அனைத்தும் அழகுற அமைக்கப்பட்டவை. ... மேலும்
 
1.      கிழக்கு       -        இந்திரன்    -        ... மேலும்
 
அன்னை ஸ்ரீ ராஜ மாதங்கியின் ஸ்ரீ மீனாக்ஷியின் கர்ப்ப கிரஹ வெளிப்பிரஹார நடைபாதைச்சுற்றில் அமைந்த ... மேலும்
 

கம்பத்தடி மண்டபம் செப்டம்பர் 07,2018

இம்மண்டபம் சொக்கநாதர் திருவாயிலுக்கு நேர்கிழக்கே உள்ளது. இதற்கு நந்தி மண்டபம் என்றும் வீரப்ப மண்டபம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar