பதிவு செய்த நாள்
11
செப்
2018
11:09
உடுமலை: விநாயகர் சதுர்த்தியன்று, பிரதிஷ்டை செய்ய, உடுமலையில் விநாயகர் சிலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பல்வேறு அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். இந்து முன்னணி சார்பில் உடுமலை நகரம் மற்றும் ஒன்றிய பகுதியில், 180 சிலைகளும், குடிமங்கலம் ஒன்றியத்தில், 33 சிலைகளும், மடத்துக்குளம் ஒன்றியத்தில், 119 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
மேற்கு ஒன்றிய பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள், 14ம் தேதி உடுமலை, வெஞ்சமடை வாய்க்காலில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
உடுமலை நகரம், தெற்கு, கிழக்கு ஒன்றிய பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள், 15ம் தேதி விசர்ஜனம் செய்யப்படுகிறது. அன்று மதியம், 2:00 மணிக்கு, நேதாஜி மைதானத்தில், பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வல துவக்க விழா நடக்கிறது.
காலை, 11:00 மணிக்கு, குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. 16ம் தேதி, மடத்துக்குளம் ஒன்றியத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்ட சிலைகள், அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.