சிவகாசி:அருப்புக்கோட்டை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், சிவகாசியில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டி, பகவத் கீதை ஸ்லோகம் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒய்.ஆர்.டி.வி., பள்ளி தலைமையாசிரியர் மகாலெட்சுமி பரிசு வழங்கினார்.