திண்டுக்கலில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: எஸ்.பி., பேச்சு வார்த்தை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2018 12:09
திண்டுக்கல்:குடைப்பாறைபட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு குறித்து எஸ்.பி., சக்திவேல் இருதரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரம் இடங்களில் விநாயகர் பிரதிஷ்டை செய்கின்றனர்.
அந்தந்த பகுதிகளில் 15ம் தேதி முதல் 18 ம் தேதி வரை ஊர்வலமாக சிலைகள் எடுத்து சென்று அரசு நிர்ணயித்த இடத்தில் கரைக்கப்படும்.
மதுரை ரோடு குடைப்பாறைபட்டியில் 7 அடி உயர விநாயகர் சிலை அமைக்கின்றனர். 15 ம் தேதி காலை 10:00 மணிக்கு ஊர்வலம் துவங்கி கோட்டை மாரியம்மன் கோயில் தெப்பத்தில் கரைக்கப்படும். ஊர்வலம் குறித்து எஸ்.பி. சக்திவேல் நேற்று (செப்., 10ல்) இருதரப்பினருடன் ஆலோசனை நடத்தினார். வழக்கம்போல் ஊர்வலத்தை உரிய நேரத்தில் அனுமதி பாதையில் அமைதியாக நடத்துவது. போலீஸ், வருவாய் துறை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது என தீர்மானித்தனர்.