சீர்காழி அண்ணன் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2018 12:09
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அண்ணன்கோயில் என்றழைக்கப்படும் திருவெள்ளக்குளம் கிராமத்தில் 108 வைணவ திருத்தலங்களில் 39வதும், திருநாங்கூரில் அமை ந்துள்ள 11 திவ்யதேசத்தில் 5வதுமான திருப்பதி ஸ்ரீ நிவாசபெருமாளுக்கு அண்ணணான திகழும் ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
குமுதவள்ளி தாயார் அவ தரித்த இத்தலத்தில் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசணம் செய்துள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அண்ணன் பெருமாளை வழிபட்டால் தி ருமண தடை மற்றும் எம பயம் நீங்கும். இக்கோயிலின் பிரம்மோற்சவ விழா திருப்பதியை போல புரட்டாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு பிரம்மோற்சவ விழா இ ன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ அண்ணன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருள பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கருடக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை மாதவன் பட்டாச்சாரியார் தலைமையிலானோர் நடத்திவைத்தனர். தொடர்ந்து வரும் 16ம் தேதி கருடசேவையும், 19ம் தேதி இரவு திருக்கல்யாணம், 21ம் தேதி திருத்தேர், தீர்த்த வாரியும், 23ம் தேதி இரவு தெப்போற்சவமும் நடைபெறுகிறது.