பதிவு செய்த நாள்
14
செப்
2018
02:09
வேலூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 451 கிலோ லட்டால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, பக்தர்கள் வழிபட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில், வலம்புரி சக்தி கணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று (செப்., 13ல்) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 451 கிலோ லட்டால், பள்ளிகொண்டா ரங்கநாதருடன் இணைந்த, விநாயகர் சிலை செய்யப்பட்டது.
இதேபோல், குடியாத்தம், நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பு ஜோதி விநாயகர் கோவிலில், 451 கிலோ எடை லட்டில், பாண்டுரங்கனுடன் இணைந்த, விநாயகர் சிலைஅமைக்கப் பட்டுள்ளது. இவற்றை ஏராளமான பக்தர்கள், ஆச்சர்யத்துடன் பார்த்து வழிபட்டனர்.