பதிவு செய்த நாள்
14
செப்
2018
02:09
மாடம்பாக்கம்:மாடம்பாக்கம், மதுரா நூத்தஞ்சேரியில் உள்ள, தேவி கருமாரி அம்மன் கோவி லின், விநாயகர் சன்னதிக்கு, நேற்று (செப்., 13ல்)காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் அருகே, மதுரா நூத்தஞ்சேரி கிராமம் உள்ளது. இங்குள்ள தேவி கருமாரி அம்மன் கோவில் வளாகத்தில், ஜோதி வலம்புரி விநாயகர் சன்னதி, புதிதாக கட்டப்பட்டது.
நேற்று (செப்., 13ல்) காலை, இந்த விநாயகர் சன்னதிக்கு, கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அம்மனுக்கு கலசாபிஷேகமும் நடந்தது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.