பதிவு செய்த நாள்
04
பிப்
2012
10:02
புதூர்: மதுரை புதூர் லூர்தன்னை சர்ச் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. பிப்.,11ல் அன்னையின் தேர்பவனி நடக்கிறது.விழாவிற்கு, பங்குதந்தை ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மதுரை வடக்கு வட்டார பாதிரியார் அந்தோணிராஜன் கொடியேற்றினார். இன்று முதல் தினமும் காலை திருப்பலியும், மாலை நவநாள் திருப்பலியும் நடக்கிறது. பிப்., 10ல் பிஷப் பீட்டர் பெர்னாண்டோ தலைமையில், நவநாள் திருப்பலியும், நற்கருணை பவனியும் நடக்கிறது. பிப்., 11ல் திண்டுக்கல் ஆயர் அந்தோணிபாப்புசாமி தலைமையில் புதுநன்மை விழாவும், மாலையில் குருகுல முதல்வர் ஜோசப் செல்வராஜ் தலைமையில் தேர் பவனியும் நடக்கிறது. பிப்.,12 காலை பொங்கல் விழா நடக்கிறது. மாலை பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் கொடியிறக்கம், நற்கருணை திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை பங்கு பேரவை துணை தலைவர் கிருபா, செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் மாதரசி, செல்வம் செய்திருந்தனர்.