தேவகோட்டை கண்டதேவி கோயிலில் பிப். 5ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2012 10:02
தேவகோட்டை:தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பிப். 5ல் நடக்கிறது. தேவகோட்டையில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., ராமசுப்பிரமணியன்,சிவகங்கை எஸ்.பி. பன்னீர்செல்வம்,ஏ.எஸ்.பி.சமந்த்ரோகன் ராஜேந்திரா,போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. ஏ.எஸ்.பி.,கூறியதாவது: கும்பாபிஷேகத்திற்கு வரும் வாகனங்களை ஒதுக்கப்பட்ட இடங்களில் தான் நிறுத்த வேண்டும்.
ராம்நகர் வழியே வரும் வாகனங்கள் தானுச்சாவரணி ரோடு எல்லையிலும்,ஆறாவயல் வழியே வருபவை சிறுமருதூர் கண்மாயிலும், சிறுவாச்சி விலக்கு வழியாக வருபவை வாழ்கிறமாணிக்கம் காளியம்மன் கோயில் ரோட்டில் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் இடத்தில் நிறுத்தவேண்டும். பாஸ் உள்ள வாகனங்கள் மட்டும் ரதவீதியில் அனுமதிக்கப்படும். பஸ்கள் ஒரு வழிப் பாதையில் செல்லும். பக்தர்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதுடன் குறிப்பாக பெண்கள் நகைகளை பாதுகாப்பாக அணிந்து வரவும். நெரிசலில் சந்தேகப்படும் நபர்கள் தெரிந்தால் அருகில் உள்ள போலீசாரிடம் தெரிவிக்கலாம் என்றார்.