ரக்ஷா பந்தனம் காப்புகட்டி துவங்கும் இவ்விழா பதினொரு நாட்கள் நடைபெறுகிறது. சுக்லபட்க்ஷ சஷ்டி திதியுடன் முடிவடையும் இவ்விழாவும் புது மண்டபத்தில் நடைபெறும். அன்னையின் இன்னொரு தனி விழா எனப்படும் இவ்விழாவில் கோலட்ட விழாவும் ஒன்று. அன்னை ஸ்ரீ மீனாக்ஷி ஆடி வீதியில் திரு உலாவின்போது கன்னிப்பெண்கள் அம்மையைப் போல் அலங்கரிக்கப்பட்டு இசையோடு கோலாட்டம் ஆடி வருவார்கள். இதில் குமரகுருபரரின் பிள்ளைத்தமிழ் இசைப்பாடலும் முக்கியம் பெற்றதாகும்.
2. பவித்ரோற்சவம்:
இதே மாதத்தில் ஐப்பசி பவுர்ணமி திதியுடன் முடிவடையும் இன்னொரு திருவிழா பவித்ரோற்சவம் எனப்படும மிக தெய்வீக புனித விழாவாகும். அனைத்து மூர்த்திகளுக்கும் பூணூல் அணிவித்தலும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். திருக்கோவிலில் நடைபெற்ற அனைத்து விழாக்களிலும், இதர அனைத்து பூஜைகளிலும் ஏதேனும் குறைகள் தீட்டு குற்றம் ஏற்பட்டு இருப்பின் அதாவது மந்திர ஹீனம், கிரியா ஹீனம் போன்ற அக்குற்றங்கள் நீங்கி பவித்ரம் பெற நல்ல பலன்களை அடைய, பரிகார நிவர்த்தி பூஜைகள் செய்து புனிதப்படுத்துவார்கள். முருகவேளுக்கு கந்த சஷ்டி விழாவும் நடைபெறும். இவை அனைத்தும் தனித்தனியே நடத்தப்படுவதாகும். அத்துடன் ஆடி வீதிகளில் இறையனார் திருஉலா நடைபெறும்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
21. மதுரை திருக்கோவில் திருவிழாக்கள் »