பதிவு செய்த நாள்
29
செப்
2018
11:09
கடலூர்: கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், புரட்டாசி மாதம் என்பதால் தினமும், 2,000 பேர் முடி காணிக்கை செலுத்துகின்றனர். குறிப்பாக, சனிக் கிழமைகளில், 40 ஆயிரம் பேர் வரை, முடி காணிக்கை செலுத்துகின்றனர். இதனால், விழுப்புரம், செஞ்சி, மலையனூர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் திருவந்திபுரம் வந்துள்ளனர்.
இவர்களில், 75க்கும் மேற்பட்டோர், மொட்டை அடிக்கும் பணியை புறக்கணித்து, கூடுதல் ஊதியம் கோரி, நேற்று (செப்., 28ல்) மதியம், 1:30 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில் நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார் சமாதானம் செய்தார். இதை ஏற்று, தொழிலாளர்கள், 2:00 மணிக்கு பணிக்கு திரும்பினர்.