பதிவு செய்த நாள்
29
செப்
2018
12:09
சென்னை: அம்பத்தூர், சின்ன திருப்பதி பெருமாள் கோவிலில், குருபெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. சென்னை, அம்பத்தூர், லெனின் நகர், சின்ன திருப்பதியில், பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு, வைணவ ஆசாரியர்களான ஜீயர்கள், சைவ ஆச்சாரியார்களான சங்கராச்சாரியார்கள் வருகை தந்து சிறப்பித்துள்ளனர்.
கோவில் நந்தவனத்திற்கு, வானமாமலை ஜீயர், ஆனந்தாழ்வார் நந்தனம் என, பெயர் சூட்டினார். அவரின் விருப்பப்படி, கோவிலின் தெற்கு கோபுரம் நின்றார், கிடந்தார், அமர்ந்தார் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஜீயர், மேல்கோட்டை மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர், தலக்காடு சங்கராச் சாரியார், சகடபுர சங்கராச்சாரியார், பரகால எம்பார் ஜீயர், ஹரிஹரபுர சங்கராச்சாரியார், மன்னை சண்டலங்க்கரா ஜீயர் ஆகியோர், இங்கு விஜயம் செய்துஉள்ளனர்.
புரட்டாசி மாதத்தை ஒட்டி, தற்போது, சமஷ்டி திருமஞ்சனம், சிறப்பு அலங்கார சேவை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், நாலாயிர திவ்ய பிரபந்த சேவை, வேத பாராயணம், ராமாஷ்டபதி, சங்கீத இசை, பஜனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கோவிலில், அக்., 9 முதல் 19ம் தேதி வரை நவராத்திரி விழா, அலங்கார சேவைகள் நடத்தப்படுகின்றன.
சின்ன திருப்பதி கோவிலில் சக்ரத்தாழ்வார், நரசிம்மர், பன்னிரு ஆழ்வார்கள் சன்னதிகள் உள்ளன. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு, வீணையேந்திய தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது. குரு பெயர்ச்சி முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
மேலும், தகவல் களுக்கு, கோவில் நிர்வாகி, மேனேஜிங் டிரஸ்டி திருநாவுக்கரசுவை, 93812 12120 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.