பதிவு செய்த நாள்
04
அக்
2018
12:10
சென்னை:கோவில் பராமரிப்பு குறித்த, இரண்டு நாள் பயிற்சி, அண்ணா மேலாண்மை கூட்ட அரங்கில், நேற்று (அக்.,3ல்) துவங்கியது.
அறநிலையத்துறை கமிஷனர் ராமச்சந்திரன் கூறியதாவது: அறநிலையத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும், கோவில்களை, தொன்மை மாறாமல் பராமரிப்பதற்கான நடைமுறை, நிர்வாகம், திருப்பணி, ஆகமவிதி, தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதன் முதல் கட்டமாக, தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையுடன் இணைந்து, இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.