பதிவு செய்த நாள்
04
அக்
2018
12:10
மணலி புதுநகர்: மணலிபுதுநகர், அய்யா கோவில் புரட்டாசி திருவிழா, நாளை(அக்., 5ல்) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில், ஆண்டுதோறும், புரட்டாசி திருவிழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.இவ்வாண்டு, புரட்டாசி திருவிழா, நாளை காலை, 6:30 மணிக்கு, திருநாம கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில், அன்னம், கருடவாகனம், உள்ளிட்ட வாகனங்களில், அய்யா பதிவலம் வருதல் நிகழ்வு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான, தேர் திருவிழா, 14ல் நடைபெறும்.