சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நித்ய
அனுஷ்டானங்களுடன் திருநீறு, ருத்ராக்ஷமணிந்து ""நமசிவாய நாமங்கள்
சொல்லியபடியே சிவாலயத்துட்சென்று சிவ சிந்தையுடன் இருப்பது. நான்கு கால
பூஜைகளிலும் கலந்து கொண்டு பூஜா கைங்கர்யங்கள் செய்ய வேண்டும். வில்வதளம்,
அபிஷேகப் பொருட்கள் நெய், தயிர், பால், தேன், கரும்பு, இளநீர், சந்தனம்
முதலிய பொருட்களை கொடுத்தல் வேண்டும். அன்று முழு உபவாஸம் - விரதம்
இருத்தல் வேண்டும். வயது, உடல் நிலை கருதி இயலாதவர்கள் சத்துமாவை
வெல்லத்துடன் கலந்து ஒரு வேளை உட்கொண்டு இருக்கலாம். 4ம் கால பூஜை மறுநாள்
காலை பொழுது புலர்ந்து விடுமாதலால், உடன் சென்று நீராடி ஆலயம் சென்று
இறைவனை தரிசித்து, சூரியன் உதித்து 6 நாழிகைக்கு பாராயணம் செய்ய வேண்டும்.
இவ்விதம் செய்வோர் சகல கீர்திகளும் சௌபாக்கியங்களையும் பெறுவர். குறிப்பு:
மேலும் விபரங்கள் அறிய சிவாச்சாரியார்களை பெரியவர்களைக் கேட்டு தெரிந்து
கொள்ளலாம்.