திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2018 12:10
வில்லியனூர்: திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.வில்லியனூர் அருகே உள்ள பழமை வாய்ந்த திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் (அக்.,6ல்) நடந்தது.
புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம், சிறப்பு வாய்ந்தது என்பதால் திருக்காஞ்சி கோவிலில் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரதோஷ சிறப்பு விழாவில் மூலவருக்கும், நந்திக்கும் பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட சுவாமி உள் பிரகாரத்தில் உலா நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சீத்தாராமன், கோவில் குருக்கள் சரவணன் சிவாச்சாரியார் மற்றும் அறங்காவலர் குழு நிர்வாகிகள் செய்தனர்.