பதிவு செய்த நாள்
10
அக்
2018
12:10
உடுமலை:தாமிரபரணி மகா புஷ்கரம் விழிப்புணர்வு ரத யாத்திரை, உடுமலைக்கு நேற்று (அக்., 9ல்) வந்தது.
நதியை காக்கும் விழாவாகவும், குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, அந்தந்த ராசிக்குரிய நதிகளில், நதிகளை வணங்கும் விழாவான புஷ்கரம் விழா நடக்கிறது.
விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி நதியில், புஷ்கரம் விழா நடக்கிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விஷ்வ ஹிந்து பரிசத் சார்பில், விழிப்புணர்வு ரத ஊர்வலம் நடக்கிறது.அவிநாசியில் துவங்கிய ரத யாத்திரை நேற்று, உடுமலை வந்தது. மாரியம்மன் கோவில், நேரு வீதி காமாட்சியம்மன் கோவில், ஓம் சக்தி கோவில் உள்ளிட்ட பிரதான கோவில்களில் ரதத்திற்கு வரவேற்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வீரப்பன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.