ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் நவராத்திரி தொடக்க நாளை முன்னிட்டு சாரதா சரண் உற்ஸவம் நடந்தது.
ஸ்ரீ வித்யா தீர்த்தபுரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் நேற்று (அக்., 9ல்) காலை 9:00 மணிக்கு ஸ்ரீ சாரதாம்பாள் மகா அபிேஷகம், ஸ்ரீ தேவிமஹாத்மிய பாராயணம் நடந்தது. இதை முன்னிட்டு அம்பாள் ஜெகத்ப்ரஸூதிகா அலங்காரத்தில் காட்சியளித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் அம்பாளை தரிசித்தனர்.