பதிவு செய்த நாள்
14
அக்
2018
01:10
திருப்பதி: திருமலையில் நடந்து வரும், நவராத்திரி பிரம்மோற்சவ வாகன சேவையின் முன், மதுரையை சேர்ந்த, கிராமிய கலைகள் வளர்ச்சி மையக் குழுவினர் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
திருமலையில், பிரம்மோற்சவத்தின் போது, நடக்கும் வாகன சேவையில், நாடு முழுவதிலுமிருந்து வந்து கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அதன்படி, தற்போது நடந்து வரும் பிரம்மோற்சவ வாகன சேவையின் போது, தமிழ்நாட்டின் பல கலைக்குழுக்கள் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அதில், மதுரையைச் சேர்ந்த கிராமிய கலைகள் வளர்ச்சி மையத்தைச் சார்ந்த, 31 பேர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.இவர்களின் கலைநிகழ்ச்சிகள், பக்தர்களிடம் வரவேற்பை பெற்று உள்ளன. கடந்தாண்டு, திருச்சானுார் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவத்தின் போது, இக்குழுவினர் கலைநிகழ்ச்சிகள் நடத்தி உள்ளனர். தற்போது, முதல் முறையாக திருமலையில், கலைநிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பை தேவஸ்தானம் அவர்களுக்கு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.