பதிவு செய்த நாள்
15
அக்
2018
12:10
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர்,கடலாடி தாலுகா ஜயப்ப,பக்தர்கள் சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டி பஜனை ஊர்வலம்
நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து காந்திசிலை, பேருந்துநிலையம் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடந்தது. குருநாதர் திருமால்,சற்குருநாதர் முருகானந்தம், சுந்தரநாதன் ஆகியோர் முன்னிலையில் பஜனை ஊர்வலம் நடந்தது.
குருநாதர்கள் ஜெயமணி, பாண்டி, கணேசன், குருவிகாத்தி காந்தி,ராஜன், தட்சிணாமூர்த்தி, ராஜேந்திரன், கடலாடி கருப்பையா, நாகராஜன், சுப்பிரமணியன், சாயல்குடி மாரி, ஒரிவயல்
குருசாமி, ராஜசேகர், பொதுக்குடி திருக்கண்ணன் உள்ளிட்ட பக்தர்கள்,பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஏராளமான கலந்து கொண்டனர். பக்தர்கள் ஜயப்பன் பாடல் பாடி ஊர்வலமாக
சென்றனர். ஜயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.