திண்டுக்கல்:சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மறுசீராய்வு மனு வெற்றி பெற வேண்டி, திண்டுக்கல்லில் வலியுறுத்தி அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.
மாவட்ட தலைவர் அகதீஸ்வரன் தலைமை வகித்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 - 50 வயது பெண்கள் தவிர மற்ற இருபாலரும் ஜாதி, மத வேறுபாடின்றி வழிபட அனுமதி உண்டு. ஆகம பூஜைக்கு எதிராக இளம்பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பான மறுசீராய்வு மனு வெற்றி பெற வேண்டும், என தெரிவித்தனர்.
இதே போல் நத்தத்தில் இந்து முன்னணி மற்றும் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஊர்வலம் நடந்தது. இந்து முன்னணி வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி, மாவட்ட துணைத் தலைவர் செல்லமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி, நகரச் செயலாளர் மயில் வாகணன் பா.ஜ.க., பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, ஒன்றிய தலைவர் செல்வராஜ் மற்றும் ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.