பதிவு செய்த நாள்
25
அக்
2018
12:10
நாமக்கல்: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று (அக்., 24ல்) சிவன் கோவில்களில் சிவலிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நாமக்கல், தட்டாரத் தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் உடனமர் காமாட்சி அம்மன், வள்ளிபுரம், கொசவம்பட்டி, புத்தூர், ஏ.கே.சமுத்திரம் ஆவுடையார் கோவில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது.
* எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி நாகேஸ்வரர், வேணுகோபாலசுவாமி கோவிலில், சுவாமி அன்ன அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை, சிவகாமியம்மை உடனமர் நாகேஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்துடன், வீதிஉலா வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, பிரதோஷ அறக்கட்டளைதாரர்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். அதேபோல், குமாரபாளையம், பள்ளிபாளையம், ப.வேலூர், ராசிபுரம் என, மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில், அன்னாபிஷேகம் நடந்தது.