போடி: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு போடி சுப்பிரமணியர் கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயில், பிச்சாங்கரை மலைப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்தர்களால் கட்டப்பட்ட கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது.