பதிவு செய்த நாள்
25
அக்
2018
02:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, நவ.,14ல், கொடியேற்றத்துடன் துவங்கி, நவ.,23ல், 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். அவ்வாறு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து, அடிப்படை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ முகாம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம், நேற்று 24 ல் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், துறை சார்பில் தலைமை அதிகாரிகள் பங்கேற்காமல், அதற்கடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளே, கலந்து கொண்டனர். கூட்டத்தில், 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக, கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.