பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஐப்பசி பவுர்ணமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2018 12:10
பெரியகுளம்:ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மைய த்தில் கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு பூஜை, அன்னாபிஷேகம் நடந்தது. அப்போது அன்னாபிஷேக த்தின் மீது சூரியஒளி பட்டது. குருநாதர் முரளிதர சுவாமி பாதுகைக்கு அபிஷேகம், அகல் விளக்கு ஏற்றி வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ், பக்தர்கள் செய்தனர். * ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு (அக்., 24ல்) கூடலூர் சீலைய சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிக்கு அன்னத்தால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான தரிசித்தனர். பெண்கள் பஜனை பாடினர்.